ஸ்கோடா ஸ்லாவியா அறிமுக தேதி வெளியானது

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியா ப்ராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் இரண்டாவது மாடலாக ஸ்லாவியா வெளியிடப்படுகின்றது.

சி பிரிவு செடான் ஸ்லாவியாவில் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ள நிலையில் முந்தைய ரேபிட் காருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட உள்ளதால் இந்தியாவில் பெரும்பாலும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளதால் மிகவும் சவாலான விலையில் வரவிருக்கின்றது.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜேக் ஹோலீஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 1.0 லிட்டர் TSI மற்றும் 1.5 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் ஆனது முறையே பிப்ரவரி 28 ஆம் தேதி மற்றும் மார்ச் 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Skoda Slavia Interior

குஷாக் காரில் உள்ளதை பகிர்ந்து கொள்ளும் ஸ்லாவியா காரில் 1.0-லிட்டர் TSI மூன்று சிலிண்டர் என்ஜின் மற்றும் 1.5-லிட்டர் நான்கு-சிலிண்டர் TSI பெறுவதுடன் இரண்டும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மாடலாகும். 1.0 லிட்டர் என்ஜின் 113 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க்கை வழங்கும், இதில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, 1.5 லிட்டர் என்ஜின் அதிகபட்சமாக 148 bhp மற்றும் 250 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் இணைக்கப்பட்டுள்ளது.

Skoda Slavia 1.0-litre TSI 3-cylinder 1.5-litre TSI 4-cylinder
Displacement 999 cc 1495 cc
Max Power 113 bhp 148 bhp
Max Torque 175 Nm 250 Nm
Transmission 6-Speed MT / 6-Speed AT 6-Speed MT / 7-Speed DSG

 

இந்தியா ப்ராஜெக்ட் 2.0 திட்டத்தின் MQB A0 IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள குஷாக் காரை தொடர்ந்து ஸ்ல்வியா விற்பனைக்கு வர உள்ளது. புதிய ஸ்லாவியா வரவிருக்கும் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுசுகி சியாஸ் ஆகியவற்றை எதிர்கொள்ளும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.