RBI-ன் அதிரடி முடிவு.. கடன் வாங்கியவர்களையும், டெபாசிட் செய்தவர்களையும் எவ்வாறு பாதிக்கும்..!

ரிசர்வ் வங்கி குழு இன்று 10 வது முறையாக அதன் ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. இது வழக்கம்போல 4% ஆகவே தொடரலாம் எனவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35% ஆகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.

3 நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல் வேண்டுமா? இப்படி அப்பளை பண்ணுங்க.. !

இந்த நிலையில் இன்று நடந்த ஆய்வு கூட்டத்தில் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு கூட்டம் கூடி விவாதித்தது. இந்த கூட்டத்தில் தான் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

EMIல் மாற்றம் இருக்காது

EMIல் மாற்றம் இருக்காது

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் ஹோம் லோன், கார் லோன் மற்றும் வங்கி பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாதிரியான மாற்றம் இருக்கும் என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

வீட்டுக் கடன், கார் கடன் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து செலுத்தி வரும் குறைவான தவணை தொகையையே (EMI) செலுத்தி வருவார்கள். இனியும் தவணை தொகையில் மாற்றம் இருக்காது. இது கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு மிக நல்ல விஷயமே.

பிக்சட் டெபாட்சிட் வட்டி?

பிக்சட் டெபாட்சிட் வட்டி?

எனினும் வங்கிகளில் பிக்சட் டெபாட்சிட் செய்துள்ள டெபாசிட் தாரர்களுக்கும், வட்டி விகிதத்தில் எந்த அதிகரிப்பும் தற்போதைக்கு இருக்காது. அவர்கள் வட்டி விகிதத்தில் மாற்றம் காண இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். இது அவர்களுக்கு மிக பெரிய ஏமாற்றமாகவே இருக்கலாம். ஏனெனில் கடைசியாக மே 2020ல் வட்டி விகிதத்தில் வட்டி குறைக்கப்பட்ட பின்னர், தற்போது வரையில் அப்படியே உள்ளது.

ரெப்போ லிங்க்டு ஹோம் லோன்- வாகன கடன்
 

ரெப்போ லிங்க்டு ஹோம் லோன்- வாகன கடன்

ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவால், வங்கி அதன் ரிஸ்க் பிரீமியத்தினையோ அல்லது மார்ஜினையோ அதிகரிக்கவோ? குறைக்கவோ? முடிவு செய்யும் வரை, ரெப்போ ரேட்டுடன் இணைக்கப்பட்ட வீடு மற்றும் வாகனக் கடனுக்கான விகிதங்கள் விரைவில் அதிகரிக்க வாய்ப்பில்லை. இதனால் கடன் வாங்கியவர்கள் தற்போதைக்கு EMI விகிதத்தினை செலுத்துவார்கள்.

வட்டி விகித நிலவரம்

வட்டி விகித நிலவரம்

பல வங்கிகள் வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்க கட்டண தள்ளுபடி ஆகியவற்றில் பண்டிகை கால சலுகைகளை வழங்குவதால், புதியதாக கடன் வாங்கத் திட்டமிடப்பட்டவர்கள் விரைவில் இந்த வாய்ப்பினை பெறலாம்.

தற்போதைய நிலவரப்படி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் 6.50%ல் இருந்தும், கார் கடனுக்கு 7.20% வரையில் கடன் பெறலாம்.

வட்டி மாறலாம்

வட்டி மாறலாம்

அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில், வரவிருக்கும் பணவீக்க கொள்கை கூட்டத்தில் முக்கிய முடிவினை எடுக்கலாம். ஆக புதியதாக கடன் வாங்க நினைப்பவர்கள், இந்த நல்ல வாய்ப்பினை அதற்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கிடையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்களது வணிகத்தினை மேம்படுத்த பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன

ஷார்ட் டெர்ம் டெபாசிட் ரேட் அதிகரிக்கலாம்

ஷார்ட் டெர்ம் டெபாசிட் ரேட் அதிகரிக்கலாம்

வட்டி விகித சுழற்சியானது கீழே இருந்து U வடிவ மாற்றத்தினை காணலாம். இதற்கிடையில் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம், முதலில் மீடியம் டெர்மில் இருந்து நடுத்தர கால டெபாசிட்டுகளுக்கு அதிகரிக்கலாம். நீண்டகால வட்டி விகிதங்களைப் பொறுத்த வரையில், இந்த விகிதங்கள் அதிகரிக்க இன்னும் சிறிது காலம் ஆகும்.

பிக்சட் டெபாசிட் விகிதம்

பிக்சட் டெபாசிட் விகிதம்

ஏற்கனவே பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது. இந்த நிலையில் மேற்கொண்டு குறைப்பு இருக்காது. எனினும் சில வங்கிகள் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க வட்டியில் மாற்றம் செய்யலாம். அல்லது சில திட்டங்களுக்கான வட்டியினை குறைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Home loan, car loan EMIs and bank FDs: How does it affect borrowers and depositors

Home loan, car loan EMIs and bank FDs: How does it affect borrowers and depositors/RBI-ன் அதிரடி முடிவு.. கடன் வாங்கியவர்களுக்கும், டெபாசிட் செய்தவர்களுக்கும் எவ்வாறு பாதிக்கும்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.