அந்த ஒரு நிமிஷம் நான் பட்ட வேதனை இருக்கே : ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் உலகம் அறிந்த ஒரு நடிகர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். இவ்வளவு ஏன் ஜப்பானில் கூட இவருக்கு ரசிகர் மன்றம் உண்டு. பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் ரஜினிக்கு தற்போது சற்று சோதனைக்காலம் என்றுதான் சொல்லவேண்டும்.

சமீபத்தில் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும் வகையில் வெற்றிபெறாத நிலையில் தன் அடுத்த படத்தில் விட்டதை பிடிக்க திட்டமிட்டுள்ளார் ரஜினி. இந்நிலையில் நேற்று தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக
ரஜினி
வெளியிட்டார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி தனது 169 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார்.

பேட்ட படத்தை தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கின்றார். இந்நிலையில் ரஜினியைப்பற்றி பலரும் அறியாத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் எனபது அனைவரும் அறிந்ததே. மேலும் தன் படங்களில் தனக்கு உண்டான கடவுள் நம்பிக்கையை தனது வசனங்கள் மூலம் ஆங்காங்கே வெளிப்படுத்துவார்.

நயன்தாரா இல்லனா சமந்தா..ரிலீஸ் தேதியுடன் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர்..!

மேலும் ரஜினி பாபாவின் தீவிர பக்தரும் கூட. இந்நிலையில் ரஜினி எப்போதும் ருத்ராச்சம் அணிவதை வழக்கமாக வைத்திருப்பார். எக்காரணத்தை கொண்டும் அவர் ருத்ராச்சத்தை கழட்டமாட்டார். இப்படி இருக்க
அருணாச்சலம்
படப்பிடிப்பின் போது ரஜினியின் ருத்ராச்சம் காணவில்லையாம். படப்பிடிப்பு முடிந்து இரவுதான் அவருக்கு தனது ருத்ராச்சம் காணவில்லை என்றே தெரிந்ததாம்.

உடனே என்ன செய்வதென்று தெரியாமல் பதறிப்போன ரஜினி படப்பிடிப்பு தளத்திற்கு இரவு வந்து தனது ருத்ராச்சத்தை தேடிக்கொண்டிருந்தாராம். இவர் தேடிக்கொண்டிருப்பதை பார்த்த படக்குழுவினர் செட் லைட்டுகளை எரியவிட்டு அவர்களும் சேர்ந்து தேடினார்களாம்.

ஒருவழியாக இறுதியில் அந்த ருத்ராச்சம் கிடைத்ததும் தான் ரஜினிக்கு நிம்மதியாக இருந்ததாம். பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal – கவித்துவமான Commercial படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.