அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் – அரசு இப்படியொரு ஷாக்!

ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்றும், அவர்கள் மூன்று மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் அரசு தெரிவித்து உள்ளது.

ஆப்பிரிக்க நாடான
ஜிம்பாப்வே
நாட்டில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் 100 அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7,500 ரூபாய். கடந்த சில நாட்களாக, அரசுப் பள்ளி
ஆசிரியர்கள்
ஊதிய உயர்வு கோரி ஜிம்பாப்வே அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை பரிசீலித்த அரசு, அவர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு அளிக்க முன்வந்தது. ஆனால் இதை அவர்கள் ஏற்க மறுத்தனர். மேலும் மாத ஊதியத்தை 500 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதை அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைவுக்கு பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், தலைநகர் ஹராரே உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் ஊதிய உயர்வு காரணமாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பள்ளிகளுக்கு வரவில்லை. இதன் காரணமாக பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

‘கொரோனா அடுத்த திரிபு மிகவும் ஆபத்தானது!’ – WHO எச்சரிக்கை!

இதற்கிடையே, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மூன்று மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களது சம்பளமும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும், ஜிம்பாப்வே தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் ஈவ்லின் என்ட்லோவ் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.