அழுத்தம் கொடுக்கும் நாடுகள், அடம் பிடிக்கும் ரஷ்யா: மூளுமா உலகப்போர்?

வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை தவிர்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்து வருவதாக தெரிகிறது. உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 

தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது, ​​அடுத்த சில நாட்களில் ஒரு பெரிய அசம்பாவிதம் நடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால், அது இரு நாடுகளுக்கு மட்டும் உரிய பிரச்னையாக இருக்காது. இந்தப் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும், சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் இருப்பதால், இந்தப் போர் உலகப் போராக மாற அதிக நேரம் எடுக்காது.

எச்சரிக்கையால் எந்த பலனும் இல்லை 

ரஷ்யாவின் தாக்குதல் குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் தனது குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க குடிமக்கள் உக்ரைனை விட்டு விரைவில் வெளியேற வேண்டும் என்று பைடன் கூறியுள்ளதாக செய்தி நிறுவனமான AFP தெரிவித்துள்ளது. 

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கான அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு அதிபர் பைடன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ரஷ்யா பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த எச்சரிக்கையால் பெரிய பலன் கிடைத்ததாகத் தெரியவில்லை. 

மேலும் படிக்க | Ukraine crisis: அமெரிக்காவிடம் THAAD எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்பைக் கோரும் உக்ரைன்

லெக்சர் கேட்கத் தயாராக இல்லை 

கடந்த சில தசாப்தங்களில் ஐரோப்பா எதிர்கொண்ட “மிகவும் ஆபத்தான தருணங்களில்” உக்ரைன் நெருக்கடியும் தற்போது சேர்ந்துள்ளது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வியாழக்கிழமை தெரிவித்தார். பிரிட்டனின் உயர்மட்ட தலைவர் ரஷ்ய தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், கிரெம்ளின் (ரஷ்ய அதிபர் அலுவலகம்) மேற்கத்திய நாடுகளின் ‘லெக்சர்களை’ கேட்காது என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 

பிரிட்டிஷ் வீரர்கள் போலந்து சென்றடைந்தனர் 

இதற்கிடையில், உக்ரைனின் வடக்கில் அமைந்துள்ள பெலாரஸில் ரஷ்ய துருப்புக்களின் இராணுவ நடவடிக்கைகள் காணப்படுகின்றன. உக்ரைன் எல்லைக்கு அருகே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் குவிந்துள்ள நிலையில். வியாழன் அன்று, 350 வீரர்களுடன் பிரிட்டிஷ் ராயல் ஏர் ஃபோர்ஸ் போர் விமானம் போலந்தில் தரையிறங்கியது. மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகின்றன. ஆனால் மாஸ்கோவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இதுவரை காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா – உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.