இந்தியாவுக்கு எதிராக பொய் செய்தி; 60-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் முடக்கம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

புதுடெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் கூறியதாவது:

கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் குறித்து மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அதேநேரம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாட்டுக்கு எதிராக பொய்யான செய்திகள் வெளியிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

கடந்த 2 மாதங்களில் இந்தியாவுக்கு எதிராக பொய்யான செய்திகளை வெளியிட்ட யூடியூப் உள்ளிட்ட பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் 60-க்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த யூடியூப் சேனல்கள் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு வந்தன.

பத்திரிகைகள் மூலமும் பொய்யான செய்திகள் வெளியாகின்றன. பத்திரிகையாளர்கள் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். பத்திரிகை கவுன்சில் சட்டம் 14-ன் கீழ் நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நெறிமுறைகளை மீறிய 150-க்கும் மேற்பட்ட விவகாரங்களில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பத்திரிகையாளர்கள் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் பத்திரிகையாளர்களுக்காக சிறப்புமுகாம்கள் நடத்தப்பட்டன. கரோனாவால் இறந்த 123 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.6.15 கோடி நிதியுதவி அளிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். – பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.