இந்தியா ஹாட்ரிக் வெற்றி * கோப்பை கைப்பற்றி அசத்தல்| Dinamalar

ஆமதாபாத்: விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது இந்தியா. மூன்றாவது போட்டியில் 96 ரன்னில் வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. கொரோனா காரணமாக அனைத்து போட்டிகளும் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மோடி மைதானத்தில் நடந்தன. முதல் இரு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது, கடைசி போட்டி நடந்தது.

‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ராகுல், சகால், தீபக் ஹூடா, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ், குல்தீப் யாதவ், தீபக் சகார் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தான் ஜோடி சுமார் துவக்கம் தந்தது. அல்ஜாரி ஜோசப் வீசிய போட்டியின் 4வது ஓவரில் ரோகித் சர்மா (13), கோஹ்லி (0) அவுட்டாகினர். தவானும் (10) நிலைக்கவில்லை. பின் இணைந்த ஸ்ரேயாஸ், ரிஷாப் பன்ட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரைசதம் அடித்தனர். 4 வது விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்த போது ரிஷாப் (56) அவுட்டானார். சூர்யகுமார் (6) வந்த வேகத்தில் வெளியேறினார். ஸ்ரேயாஸ் 80 ரன் எடுத்தார்.

பின் வரிசையில் தீபக் சகார் 38, குல்தீப் 5 ரன் எடுத்தனர். கடைசியில் வாஷிங்டன் சுந்தர் (33), சிராஜ் (4) அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 265 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹோல்டர் 4, ஜோசப் 2, வால்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

latest tamil news

அபார பந்துவீச்சு

விண்டீஸ் அணிக்கு துவக்கம் மீண்டும் மோசமாக அமைந்தது. ஹோப் (5), பிராவோ (19) அவுட்டாக, கிங் (14), புரூக்ஸ் (0), சகாரிடம் சிக்கினர். ஹோல்டரை (6) பிரசித் கிருஷ்ணா திருப்பி அனுப்பினார். விண்டீஸ் அணி 82 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஓடீன் ஸ்மித் 18 பந்தில் 36 ரன் எடுத்து அவுட்டானார். வால்ஷ் (13), ஜோசப் (29) அவுட்டாக, விண்டீஸ் அணி 37.1 ஓவரில் 169 ரன்னுக்கு சுருண்டது. இந்தியாவின் சிராஜ், பிரசித் தலா 3, தீபக் சகார், குல்தீப் தலா 2 விக்கெட் சாய்த்தனர். 96 ரன்னில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.