உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த நந்திதா

அட்டக்கத்தி படத்தில் அறிமுகமானவர் நந்திதா. அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், புலி, இடம் பொருள் ஏவல், அஞ்சல, உள்குத்து, தேவி2, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நந்திதா சமீபகாலமாக சற்று உடல் எடை கூடி காணப்படுகிறார். இது தொடர்பான படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்த படங்களை பார்த்த நெட்டிசன்கள் இப்போதுதான் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று ஒரு பக்கம் புகழ்ந்தாலும் ஒரு சிலர் கேலியும் செய்து, இனி அக்கா, அண்ணி கேரக்டரில் நடிக்கலாம் என்றும் கிண்டல் செய்திருக்கிறார்கள். இதற்கு பதில் அளித்து நந்திதா எழுதியிருப்பதாவது:

நான் ஒன்றும் கடவுள் இல்லை. நான் எல்லா பெண்களையும் போன்று சாதாரண மனுஷிதான். எப்படி உங்களால் (கிண்டல் செய்கிறவர்கள்) இப்படி சிந்திக்க முடிகிறது. எப்படி இந்த வார்த்தைகளை பயன்படுத்த முடிகிறது. இப்படிப்பட்டவர்களால் நரகத்தில் வாழ்வது போன்று இருக்கிறது. எல்லோரையும் போன்று நானும் கஷ்டப்படுகிறேன். நான் என் உடலை நேசிக்கிறேன். நான் இப்போது இருக்கும் விதம், என் தோற்றம் எனக்கு பிடித்திருக்கிறது. என்று எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.