ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 14ம் தேதி ஆலோசனை

சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு வேகமாக குறைவது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா பரவலால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 15-ம் தேதியுடன் முடிவடைய உள்ளன. 
இந்நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து பிப்ரவரி 14-ம் தேதி முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் நர்சரி பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.