”என்ன இது… ஃபேன் மேட் போஸ்டரா?” – தனுஷின் ‘நானே வருவேன்’ போஸ்டரை விமர்சிக்கும் ரசிகர்கள்

தனுஷின் ‘நானே வருவேன்’ புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

ஜவஹர் மித்ரனின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ’மாறன்’ படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்திலும், ‘வாத்தி’ பை-லிங்குவல் படத்திலும் நடித்து வருகிறார். இதில், ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

image

கடந்த வருடம் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கினாலும் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்து வந்தது படக்குழு. தற்போது‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரங்களில் நடிப்பதை உறுதி செய்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே, தனுஷ் இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

image

தற்போது வெளியிட்டுள்ள போஸ்டரில் தாடி எடுத்து இளமை துடிப்புடன் தனுஷ் கவனம் ஈர்க்கிறார். அதேசமயம், தாடி வைத்திருக்கும் தனுஷின் கெட்டப் செயற்கையாய் மனதில் ஒட்டவில்லை.

image

image

இந்தப் போஸ்டரை வெளியிட்டவுடன் ‘இது ஒரிஜினல் போஸ்டரா.. இல்ல ஃபேன் மேட் போஸ்டரா’… ’என்ன கண்றாவி இது’, ‘ போஸ்டரே படத்தின் தரத்தை சொல்கிறது’, ’என்ன இது அஃபிஷியல்தானே?’ என்றெல்லாம் தங்கள் அதிருப்தியினை செல்வராகவன் வெளியிட்டுள்ள பதிவில் கருத்திட்டு வருகிறார்கள் ரசிகர்கள். அதேசமயம், போஸ்டரை ’தரமான சம்பவம்’ என்று பாராட்டியும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.