கல்வி கற்கும் இடத்தில் மதத்தைக் புகுத்துவது தீவிரவாதத்தை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.. விஜயகாந்த்.!!

கல்வி கற்கும் இடத்தில் மதத்தைக் புகுத்துவது தீவிரவாதத்தை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில், ஹிஜாப் அணிந்து சென்ற சம்பவத்தால் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.   கல்வி கற்கும் இடத்தில் அனைவரும் சமம் என்ற உணர்வு வரவேண்டும் என்பதற்காகத்தான் மாணவர்களுக்கு சீருடை என்ற திட்டமே கொண்டு வரப்பட்டது.

கல்விக்கும் மதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கல்வி கற்கும் இடத்தில் மதத்தைக் கொண்டு வந்து புகுத்துவது மிகவும் அபாயகரமான விஷயம்.  தீவிரவாதத்தை விட மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும்.

இதனை வளர விட்டால் தவறான ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதால், இதனை இரும்புக்கரம் கொண்டு உடனே அடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.