காதலர் தின ஸ்பெஷல்: அனிருத் குரலில் முகேன் ராவ் – ஆத்மிகாவின் இசை ஆல்பம்

நடிகரும், பாடகருமான முகேன் ராவ் மற்றும் நடிகை ஆத்மிகா நடிப்பில், காதலர் தினத்தையொட்டி இசை ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார்.

தனியார் டி.வி.யின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்துகொண்டு புகழ்பெற்றதுடன், அந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆனவர் முகேன் ராவ். மலேசியாவில் பிறந்த வளர்ந்த இவர், அங்கு பாடகராகவும், நடிகராகவும் புகழ்பெற்றவர். தற்போது தமிழ் சினிமாவிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவர், நடித்த ‘வேலன்’ படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்தது. தற்போது மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

image

இந்நிலையில் சரிகம நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இசை ஆல்பத்தில் முகேன் ராவ் நடித்துள்ளார். ‘மயக்குறேயே, சிரிக்கிறியே…’ என தொடங்கும் அந்தப் பாடலை அனிருத் பாடி உள்ளார். பாடலை எழுதியதுடன், இசை அமைத்துள்ளார் அனிவி. ஜிம்மிருத் இயக்கி உள்ளார். இதில் முகேன் ராவுடன், ‘மீசைய முறுக்கு’, ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்த ஆத்மிகா ஜோடியாக ஆடியுள்ளார். காதலர் தின ஸ்பெஷலாக இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.