ஜீ தமிழில் காதலர் தினம் கொண்டாட்டம்

இன்னும் சில நாட்களில் காதலர் தினம் வரவுள்ள நிலையில் எங்கும் காதல் பற்றிய பேச்சே உள்ளது. நேயர்களின் மனதை புரிந்து கொண்ட ஜீ தமிழ் தொலைக்காட்சி இரண்டு இன்ப அதிர்ச்சிகளை தர உள்ளது. முதலாவதாக வரும் பிப்ரவரி 13ல் 1:30 மணிக்கு, 'காதல் சங்கமம்' – காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பவுள்ளது. இந்த 2 மணிநேர சிறப்பு நிகழச்சியில் செம்பருத்தி, சத்யா மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய தொடர்களை சேர்ந்த ஜோடிகளின் காதல் கதைகள் காட்டப்படவுள்ளன.

இந்த புதுமையான நிகழ்ச்சி, ஒவ்வொருவரும் அவர்களது அன்பிற்குரியவரின் உறவினை, அன்பு மற்றும் நம்பிக்கையின் மூலம் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்து சொல்லும். மேலும் தங்களது ஜோடியிடம் உள்ள குறைகளை அடையாளம் காண்பதையும்; தவறுகளை சரி செய்து, முன்பு இருந்ததை விட ஜோடிகள் ஒற்றுமையாக மாறுவதையும், இந்த நிகழ்ச்சியில் காணலாம்.

தொடர்ந்து பிப்., 13, பிற்பகல் 3:30 மணியளவில் காதல் திரைப்படமான ஸ்ரீதேவி சோடா சென்டர் ஒளிபரப்பாகவுள்ளது. சூரி (சுதீர் பாபு) மற்றும் ஸ்ரீதேவி (ஆனந்தி) ஆகியோரது இந்த காதல் காவியம் அனைவரது மனதையும் தொடும். காதல் கதையுடன் சமூகத்தில் வேர்விட்டு வளர்ந்துள்ள சாதி பிரச்சனைகளையும், இதயத்தை படபடவைக்கும் உண்மைகளையும் வெளிபடையாகக் காட்டியுள்ள இந்த படம். இறுதியில் வெல்வது காதலா அல்லது சாதி வேறுபாடுகளா என்பதை பரபரப்பான கதையில் காணலாம்.

நினைத்தாலே இனிக்கும், சத்யா மற்றும் செம்பருத்தி ஆகிய தொடர்களின் 'காதல் சங்கமம்' மற்றும் ஸ்ரீதேவி சோடா சென்டர் படம், சிறப்பு நிகழ்ச்சியுடன் ஜீ தமிழ் டிவியில் காதலர் தினத்தை கொண்டாட காணத்தவறாதீர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.