தடுப்பூசியால் சுவாச உறுப்புகளுக்கு பாதுகாப்பு இல்லை: புதிய முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

கொரோனா
வைரஸுக்கு
தடுப்பூசி
மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதற்கிடையே, தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி தொடர்பாக புதிய முயற்சிகளில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து விரைவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக
கனடா
நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவைச் சேர்ந்த மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி தொடர்பாக புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான கட்டுரை, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கொரோனா வைரஸ் வாய் அல்லது மூக்கு வழியாக உடலுக்குள் புகுவதாக இதுவரை நடத்திய ஆய்வுகளில் தெரிகிறது. இந்த வைரஸ் முதலில் சுவாச உறுப்புகளையே தாக்குகிறது. தற்போது வழங்கப்படும் தடுப்பூசிகள் சிறப்பானவையாக இருந்தாலும், சுவாச உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘கொரோனா அடுத்த திரிபு மிகவும் ஆபத்தானது!’ – WHO எச்சரிக்கை!

எனவே, சுவாச உறுப்புகளை பாதுகாக்கும் வகையில், மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூக்கு வழி தடுப்பு மருந்தை விரைவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்ட சோதனைக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சோதனை முறையில் 900 பேருக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதன் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அடுத்தகட்டமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முடிவை அரசு எடுக்கும் என தெரிகிறது. அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.