தந்தை திடீர் மரணம்.. இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற கமல் பட நடிகை!

பாலிவுட் சினிமாவில் 1990 களில் இருந்து தற்போது வரை பிரபல நடிகையாக வலம் வருபவர்
ரவீனா டாண்டன்
. ஏராளமான இந்திப் படங்களில் நடித்துள்ள ரவீனா தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

அடக்கடவுளே… என்ன இப்படி ஆகிப்போச்சு.. பிரேம்ஜியுடன் திருமணமா? ஒரே போடாய் போட்ட பிரபல பாடகி!

தமிழில் அர்ஜூனின் சாது படத்திலும் கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது தந்தையும் பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான
ரவி டாண்டன்
இன்று காலமானார். 87 வயதான ரவி டாண்டன், வயது முதிர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் இன்று காலமானார்.

ஹாலிவுட் படத்தையே மிஞ்சிருவாங்க போல… முழுக்க அடல்ட் கன்டென்ட்… மிரளவிடும் மன்மதலீலை கிளிம்ப்ஸ்!

மும்பையில் உள்ள வீட்டில் ரவி டாண்டனின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் ,ஃபரா கான், நிதி தத்தா மற்றும் சஜித் கான் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். இறுதிச்சடங்கின் போது ரவீனா டாண்டன் தனது தந்தையின் உடல்லை சுமந்து சென்று இறுதிச்சடங்குகளை செய்தார்.

ஆன்லைன் க்ளாஸில் அபினயம் கற்றுத்தரும் டிவி பிரபலம்!

சஞ்சீவ் குமாரை வைத்து சஸ்பென்ஸ் படமான ‘அன்ஹோனி’யை இயக்கிய பெருமை ரவி டாண்டனுக்கு உண்டு. ராஜேஷ் கண்ணா, ஸ்ரீதேவி மற்றும் ஸ்மிதா பாட்டீலின் ‘நஸ்ரானா’, ரிஷி கபூர் மற்றும் நீது கபூருடன் ‘ஜூட்டா கஹின் கா’, அமிதாப் பச்சன் நடித்த க்ரைம் த்ரில்லர் படமான ‘மஜ்பூர்’, மல்டி ஸ்டாரர் படங்கள் ‘குத்தார்’ மற்றும் ‘ஜிந்தகி’ உள்ளிட்ட பல படங்களை ரவி டாண்டன் இயக்கியுள்ளார்.

ஜெய் ரொம்ப நல்ல பையன்; நல்ல மியூசிக் டைரக்டர் என்ற பெயரும் வாங்குவார் – ஜெயபிரகாஷ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.