தெற்கு ரயில்வே மண்டலத்தில் 4.58 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வே மண்டலத்தில், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு குழு நடத்திய அதிரடி நடவடிக்கைகளால், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ₹4.58 கோடி மதிப்புள்ள சுமார் 10.055 கிலோ அளவிலான தங்கப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.