நயன்தாரா இல்லனா சமந்தா..ரிலீஸ் தேதியுடன் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர்..!

நானும் ரவுடி தான்
என்ற வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும்
விஜய் சேதுபதி
மற்றும்
விக்னேஷ் சிவன்
இணைந்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
நயன்தாரா
மற்றும்
சமந்தா
கதாநாயகிகளாக நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைவதால் இப்படத்திற்கு ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படபிடிப்பெல்லாம் நிறைவு பெற்று இறுதி கட்ட பணிகக்ள் நடந்து வந்த நிலையில் இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நான் இதுக்காக தான் சம்மதிக்கிறேன் : தனுஷ் ஓபன் டாக்..!

ஆனால் சில பல காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இருப்பினும் விரைவில் இப்படம் வெளியாகும் என்று சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த டீசரை பார்க்கும்போது இப்படம் காதல் கலந்த காமெடி படமாக உருவாகியிருப்பது தெரிகிறது. விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோரின் முக்கோண காதல் கதையை சற்று வித்யசமாக டீசரில் சொல்லியிருக்கின்றனர்.

கலர்புல்லாக வெளியான இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது. மேலும் இப்படம் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்கர்ராஜு வெற்றி விழா : நன்றி தெரிவித்த இயக்குனர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.