'நான் தான் ராணி' – மகேஸ்வரி

சின்னத்திரை ரசிகர்களுக்கு மகேஸ்வரி பற்றிய அறிமுக தேவையில்லை. வீஜேவான இவர் தொடர்ந்து சின்னத்திரையில் ஹீரோயினாகவும் தற்போது சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இவரது சொந்த வாழ்க்கையை பொறுத்தமட்டில் கணவருடன் விவாகரத்து பெற்று மகன் மற்றும் அம்மாவுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த கசப்பான அனுபவங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கேரியரில் கவனம் செலுத்தி வரும் மகேஸ்வரி இன்று இளைஞர்களின் கனவு கன்னி பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவரது ஹாட் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் கருப்பு சோபாவில் சாயந்த படி, கவர்ச்சியாகவும், கெத்தாகவும் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதன் வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள மகேஸ்வரி, அதன் உடன் 'ஏனென்றால் நான் தான் ராணி' என கேப்ஷன் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

திரையுலகில் இரண்டாவது முறையாக என்ட்ரி கொடுத்துள்ள மகேஸ்வரி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார். தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளில் வீஜேவாக கலக்கி வரும் மகேஸ்வரி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.