பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு மீண்டும் கொரோனா தொற்று| Dinamalar

லண்டன்:மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, பிரிட்டன் இளவரசர் சார்லஸ், 73, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் இளவரசர் சார்லஸ், சமூக வலைத்தளத்தில் நேற்று பதிவு செய்திருப்பதாவது:காலையில் வந்த பரிசோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இளவரசர் சார்லஸ் நேற்று முன் தினம் மாலை லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஏராளமானோரை சந்தித்துப் பேசினார். 2020ம் ஆண்டு மார்ச்சில் சார்லசுக்கு தொற்று ஏற்பட்டு குணம் அடைந்தார். தற்போது மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளதால் அரண்மனையிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.