பௌத்த பிக்குவாக துறவறம் பூண்ட பொலிவூட்டின் பிரபல நடிகர்!


இந்திய பொலிவூட் திரைப்பட சூப்பர் ஸ்டார் ககன் மலிக் நேற்று (10) பேங்கொக்கில் துறவறம் பூண்டார்.

இதன்படி அவர் அடுத்த 15 நாட்களை துறவியாக தமது வாழ்க்கையை கழிக்கவுள்ளார்.

தர்மத்தைக் கற்றுக் கொள்ளவும், இந்தியாவில் மதத்தை வளர்க்கவும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தம்மம் கற்க வேண்டிய நேரம். நிலையற்ற தன்மையைப் புரிந்து கொள்ளும் நேரம். அறிவைப் பெறுவதற்கான நேரம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான அவருக்கு தாய்லாந்து உட்பட பல ஆசிய நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர்.

2013 இல் புத்தரின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஸ்ரீ சித்தார்த்த கௌதம திரைப்படத்தில் இளவரசர் சித்தார்த்தாவாக நடித்தமை, மலிக்கின் மிகவும் பிரபலமான பாத்திரங்களில் ஒன்றாகும்.

2014 இல் ஹனோயில் நடந்த ஐக்கிய நாடுகளின் விசாகப்பண்டிகை பௌத்த திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படம் உட்பட பல விருதுகளை, இந்த திரைப்படம் வென்றது.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.