மத்திய அரசின் ட்ரோன் இறக்குமதி தடை..இந்த 4 பங்குகளுக்கு கைகொடுக்கலாம்..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறு விமானங்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2021லேயே ட்ரோன் தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது.

அதே சமயம் ட்ரோன் தயாரிப்பு தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் தயாரிப்புக்கு பல ஊக்கவிப்பு சலுகைகளையும் அறிவித்தது.

கிரிப்டோகரன்சி மீது வரி உயர்வு..புதிதாக ஜிஎஸ்டி வரி விதிக்க மோடி அரசு திட்டம்.. யாருக்கு பாதிப்பு..!

இறக்குமதி ட்ரோன்களுக்கு தடை

இறக்குமதி ட்ரோன்களுக்கு தடை

மத்திய அரசு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதேசமயம் ட்ரோன் இறக்குமதிக்கு தேவையான மூலதன பொருட்களை அனுமதியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம். எனினும் அனைத்து பாகங்களையும் இறக்குமதி செய்து, ஒருங்கிணைத்து ட்ரோன் இறக்குமதி செய்ய அனுமதி இல்லை.

ஒப்புதலுடன் இறக்குமதி

ஒப்புதலுடன் இறக்குமதி

அதே சமயம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு தேவையான நவீன ட்ரோன்களை அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகத்தின் ஒப்புதலுடன் இறக்குமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அரசு ட்ரோன் உற்பத்தியினை ஊக்குவிக்கிறது. இது இந்தியாவின் உற்பத்தி விகிதத்தினை அதிகரிக்க பயன்படுவதோடு, இந்திய நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

பாராஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் (Paras Defence and Space)
 

பாராஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் (Paras Defence and Space)

இது பாதுகாப்பு துறை சார்ந்த ஒரு பொறியியல் நிறுவனமாகும். இந்த பாதுகாப்பு சம்பந்தமான பொருட்களை உற்பத்தி செய்கின்றது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் சர்வதேச அளவில் ஒப்பந்தங்களை செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் புரோமோட்டார்கள் 58% மேலாக பங்கினை வைத்துள்ளனர். எனினும் அரசின் இந்த அறிவிப்பினால் இந்த பங்கு பயனடையலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்

இந்த நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வான்வெளித் துறை சார்ந்த ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகள் உண்டு. இந்த நிறுவனமும் சில நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து உற்பத்தியினை செய்து வருகின்றது. இந்த நிறுவனம் தனது கடன் தொகையையும் கணிசமாக குறைந்துள்ளது. சொல்லப்போனால் கிட்டதட்ட கடனில்லா நிறுவனமாகவே மாறியுள்ளது. இதன் ROE மற்றும் ROCE 20% மேலாக இருந்து வருகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக தொடர்ந்து நல்ல லாபத்தில் உள்ளது.

ஜென் டெக்னாலஜிஸ்

ஜென் டெக்னாலஜிஸ்

இது ஓரு ஸ்மால் கேப் நிறுவனமாகும். மத்திய அரசின் இந்த அறிவிப்பானது இந்த நிறுவனத்தினையும் ஊக்குவிக்கலாம். இந்த நிறுவனமும் கிட்டதட்ட ஒரு கடனில்லா நிறுவனமாகும். இந்த நிறுவனமும் ட்ரோன் உற்பத்தி செய்து வருகின்றது. இந்த நிறுவனம் தொடர்ந்து சில ஒப்பந்தங்களை செய்துள்ளது.

ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ்

ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ்

ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ் நிறுவனம் ட்ரோன் வணிகத்தில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனமாகும். இதற்காக இந்த நிறுவனம் NeoSky India என்ற துணை நிறுவனத்தினையும் அமைத்துள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்காவினை சேர்ந்த ட்ரோன் லாகிஸ்டிக்ஸில் முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கிலும் புரோமோட்டார்களின் பங்கு அதிகம் உள்ளது. மிக குறைவான கடன் உள்ள ஒரு நிறுவனமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

4 Drone stocks to watch for 2022: check details

4 Drone stocks to watch for 2022: check details/மத்திய அரசின் ட்ரோன் இறக்குமதி தடை..இந்த 4 பங்குகளுக்கு கைகொடுக்கலாம்..!

Story first published: Friday, February 11, 2022, 19:58 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.