வாணி போஜன் நம்பிக்கையில் மண்ணள்ளி போட்ட 'மகான்' படக்குழு: ரசிகர்கள் அதிர்ச்சி..!

கார்த்திக் சுப்புராஜ்
இயக்கத்தில்
விக்ரம்
நடிக்கும் ‘
மகான்
‘ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுவதுமாக நிறைவு பெற்றது. இந்தப்படத்தில் தனது மகன் துருவ்வுடன் இணைந்து நடித்துள்ளார் விக்ரம். இந்நிலையில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள ‘மகான்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 60 வது படமான மகானில் முதன்முறையாக மகன் துருவ்வுடன் இணைந்து நடித்துள்ளார் விக்ரம். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள இந்தப்படம் ஆக்ஷன் திரில்லர் கலந்த படமாக உருவாகியுள்ளதுது. இப்படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப்படம் நேற்று இரவு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

விக்ரம், துருவ் இருவரும் போட்டி போட்டு இந்தப்படத்தில் நடித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ள வாணிபோஜன் ‘மகான்’ படத்தில் நடிப்பதாகவும், அவர் சம்பந்தமான புகைப்படங்களும் வெளியானது. விக்ரமின் ஜோடியாக இந்தப்படத்தில் அவர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் ‘மகான்’ படத்தில் வாணி போஜனை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

வைரலாகும் படுக்கையறை புகைப்படம்.. அட்லி மனைவி செய்த வேலை: இதெல்லாம் ரொம்ப ஓவர்..!

இந்நிலையில் நேற்றிரவு வெளியாகியுள்ள ‘மகான்’ படத்தில்
வாணி போஜன்
ஒரு காட்சியில் கூட இல்லாததது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டுக்காக ஆர்வமுடன் காத்திருந்தார் வாணி போஜன். ‘மகான்’ படத்தின் வெற்றி மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்தார். தற்போது படத்தில் தனது காட்சிகள் இடம்பெறாததால் கவலையில் உள்ளாராம் வாணி போஜன்.

ஆனால், டைட்டில் கார்டில் படம் ஆரம்பிக்கும் முன்பு நன்றி என்று வாணிபோஜன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படம் முடிந்த பிறகும் படத்தில் நடித்தவர்கள் கதாபாத்திரங்களின் பட்டியலில் மங்கை என்ற கதாபாத்திரத்தின் பெயரோடு வாணிபோஜன் பெயர் இடம்பெற்றுள்ளது. படத்தின் நீளம் காரணமாக வாணி போஜனின் காட்சிகள் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பத்து தல Glimpse ஏன் இப்படி இருக்கு! படத்தில் நயன்தாரா வேடம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.