வார ராசிபலன்: 11.2.2022 முதல் 17.2.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடையமுடியும். ஸ்டூடன்ட்ஸ்க்கு படிப்புல நல்ல முன்னேற்றமும் உயர்வும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கெடைக்குங்க. வெளியூர் அல்லது ஃபாரின் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிங்க கிட்டயும் சக ஊழியர்களிடமும் வெளிவட்டாரத்திலும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கணுங்க. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெறமுடியும். உயரதிகாரிகளின் அப்ரிசியேஷன் மனசை ஹாப்பியாக்கும். பணவரவுகள் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் ஈஸியா நடைபெறும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்து ரிலேடிவ்ஸை அனுசரிச்சு நடந்துக்கிட்டா ஹாப்பியான வாரம்.

ரிஷபம்

பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் தொழிலை அபிவிருத்திச் செய்யும் நோக்கம் நிறைவேறும். விளையாட்டுத்துறைகளிலும் வெற்றிகளைப் பெறுவீங்க. பணியிடப் போட்டிகளுக்கிடையேயும் ஓரளவுக்கு ஏற்றத்தைப் பெறுவீங்க. தொழில், பிசினஸில் போட்டிகள் குறையும். லாபம் சிறப்படையும். எதிர்காலத்துக்கான உத்தரவாதம் ஒன்று உறுதியாகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவும். ஹெல்த் விஷயத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும். சுபகாரியங்கள் கைகூடும். பணவரவு சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் சூப்பரா இருக்குங்க. உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெறுவர். எதிர்பாராத பயணங்களால் அனுகூலமான பலனைப் பெறமுடியும். ஆன்மிக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.  மனதில் கான்ஃபிடன்ஸ் அதிகரிக்கும்.

மிதுனம்

புதிய நவீன கருவிகள் வாங்க அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவி கெடைக்குங்க. மறைமுக எதிர்ப்புகளும், போட்டி பொறாமைகளும் விலகும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கெடைக்குங்க. நல்ல நண்பர்களின் சேர்க்கை நற்பலனை உண்டாக்கும். அரசுவழியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் தடையின்றிக் கெடைக்குங்க.  தொழிலில்/ பிசினஸில்/ பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஏஜென்ஸி கமிஷன், கான்ட்ரக்ட் போன்றவற்றில் சிறப்பான பிராஃபிட் கெடைக்குங்க. வெளிநாடு தொடர்புடையவற்றால் ஏற்றம் தரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நற்பெயரை எடுப்பீங்க பணவரவு வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும்  அதற்கு ஏற்றாற் போல்தாங்க இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீங்க. அனுபவ பூர்வமான அறிவுத்திறன்  அதிகரிக்கும்.

கடகம்

கூட்டாளி மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார ரீதியாக உயர்வுகள் உண்டாகும். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையும் ஒற்றுமையும் இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். எதிர்பாராத உதவிகள் கெடைக்கும். எடுக்கும் முயற்சிகளில்  எப்பாடு பட்டாச்சும் வெற்றியினை எட்டிப்பிடிச்சுடுவீங்க.  உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கெடைக்குங்க. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சின்னச்சின்ன இடையூறுகளைத் தாண்டி வர வேண்டியிருந்ததாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கெடைச்சுடுங்க. புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுப்பீங்க.

சிம்மம்

தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்படுவது, உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்யறவங்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். ஆபீசில் ஒர்க் பண்றவங்க உயர்வுகளைச் சந்திப்பர். நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நனவாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வெளியூர் அல்லது ஃபாரின் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்கள் பெயர், புகழ் உயரும். அசையா சொத்துகள் வாங்கிச் சேர்ப்பீங்க. பங்கு மார்க்கெட்டில் லாபம் ஓரளவு கெடைக்கும்.

கன்னி

எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. முன் கோபத்தைக் குறைத்துக்கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது சிறப்பு. ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கெடைக்குங்க. பணவரவுகள் சுமாராக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பத மூலம் வீண்விரயங்களைக் குறைச்சுக்க முடியும். ஆபீஸ்ல ஒர்க் பண்றவங்க தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படணுங்க. தொழில், பிசினஸில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். வேலை யாட்கள் அனுகூலமாகச் செயல்படுவாங்க. உடல்நிலையில் ஓரளவுக்குத் திருப்தியளிப்பதாக இருக்கும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்கள் நலன் விரும்புவோரின் வாழ்த்து உங்களை ஹாப்பி ஆக்கிடும்.

துலாம்

தைரியமும், கான்ஃபிடன்ஸ்யும் கூடும். மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும். அதிகம் செலவாகும் என்று நினைத்த காரிய மொன்று குறைந்த செலவில் முடிவாகலாம். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். திடீர் பயணம் உண்டு.தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். குடும்பத்தினர் உங்கள் சொல்லிற்கு மதிப்புக் குடுப்பாங்க. நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும். பேரன்ட்ஸின் ஒத்துழைப்போடு வாழ்க்கையில் சில விஷயங்கள்ல முன்னேற்றம் காண்பீங்க. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ்மிக்கவர்களின் தொடர்பு கிடைக்கும். தொலை பேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும்  எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவாங்க.

விருச்சிகம்

கடந்த காலங்களிலிருந்த நெருக்கடிகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல்நிலை சுறுசுறுப்புடன் அமையும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்து சேர்க்கைகளும், பொன், பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் அமையும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவுக்கு சுமாராகவே இருக்கும். அசையும், அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் அதன்மூலம் அனுகூலமும் உண்டாகும். தொழில்/ பிசினஸில் ஓரளவுக்கு லாபம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 14 வரை

தனுசு

சுபகாரியங்கள் தடபுடலாகக் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார்-உறவினர்கள் சாதகமாகக் செயல்படுவாங்க. எதிர்பாராத உதவிகளும் கெடைக்குங்க. பல பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பூர்வீக சொத்து விஷயங்களிலுள்ள வம்பு வழக்குகள் ஒரு வழியா முடிவுக்கு வரும். உற்றார், உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். நீண்டநாள் கனவுகளும் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். வீடு, மனை, வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். புதிய தொழில் தொடங்க ஏதுவான காலமாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்குப் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வீண் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்காம இருக்கணும் நினைச்சீங்கன்னா  தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லதுங்க.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 16 வரை

மகரம்

பதவி உயர்வு மிகுந்த முயற்சி மற்றும் உழைப்பின் காரணமாகவே  கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளாலும் நற்பலன்கள் உண்டாகும். குடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாத்தி ஹாப்பியா ஆயிடுவீங்க. தொழில், பிசினஸில் ஓரளவுக்கு லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலன் உண்டாகும். ரிலேடிவ்ஸ் மற்றும் ஃப்ரெண்ட்ஸ் ஆதரவுகள் ஓரளவுக்குத் திருப்தியளிக்கும். உடல் நிலையில் சிறுசிறு பிராப்ளம்ஸ் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையுடன் அமையும். அன்றாடப் பணியில் சில இடையூறுகளை சந்தித்தாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலும் உண்டாகும்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 18 வரை

கும்பம்

கொஞ்சம்கூடத் தேவையோ அவசியமோ இல்லாத அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் குட்டியூண்டு பாதிப்புகள் உண்டாகுங்க,  ஆனால்.. உடனே சரியாகிவிடும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. நெருங்கினவங்களை அனுசரித்து நடப்பது நல்லது. பணவரவுகள் கொஞ்சம் முன்னேபின்னேதாங்க இருக்கும். தொழில், பிசினஸில் போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும் எதையும் சமாளிச்சு ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் கொடுக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்கள்னு நீங்க நினைச்சது கடைசில நல்ல நன்மை கொடுத்து அவசியமான பயணமா ஆயிடும். அசையா சொத்து வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். அலுவலகத்தில் ஒர்க் செய்யறவங்க எந்தக் காரியத்திலும் ஒருமுறைக்கு பல முறை யோசிச்சு செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். உங்க கூட ஒர்க் பண்றவங்க ஆதரவு கெடைக்குங்க. பேச்சினால் நன்மையும் லாபமும் பாராட்டும் கிடைக்கும்.

மீனம்

முயற்சி காரணமாக உயர்வுகளைப் பெறுவீங்க. கடன்கள் குறைவதுடன் எதிர்பாராத பணவரவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் தடைப்பட்ட பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிச்சு லாபம் காணமுடியும். கடன்கள் சற்று குறையும்.  பணிச்சுமையும் வெறுப்புணர்ச்சியும் முன்பைவிட ரொம்பவே குறைஞ்சு உற்சாகமாகச் செயல்பட ஆரம்பிப்பீங்க. கணவன்,  மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரிச்சுப் போவீங்க. இதன் மூலம் சந்தோஷம் கிடைக்கும். உடல் ஆரோக்யம் மேம்பட்டு நிம்மதி தரும். சிறு சிறு காலதாமதம் உண்டானாலும் நிகழ்வுகள் முழுமையடையும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரவு டிலே ஆக வாய்ப்பிருக்குங்க. மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டுக்குச் சென்று படிக்க விரும்பும் மாணவ மாணவியருக்கு நல்ல நியூஸ் உண்டு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.