வெள்ளி விலை ரூ.80,000-ஐ தொடலாம்.. தங்கமும் அதிகரிக்கலாம்.. சாமானியர்கள் இனி நினைக்க தான் முடியுமா?

கடந்த ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது முறையானது 4% மற்றும் 8% சரிவினைக் கண்டுள்ளது. தங்கத்தினை போன்றே பொதுவாக வெள்ளியின் விலையும் இருக்கும். ஆனால் சமீப காலமாக அப்படியில்லை.

இதற்கிடையில் பல நாட்கள் தொடர்ச்சியான ஏற்றத்திற்கு பிறகு இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டும் சரிவினைக் கண்டு வருகின்றன. இதற்கிடையில் இந்த போக்கானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? என்ற பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

இதற்கு நிபுணர்களின் பதில் என்ன? குறுகிய காலத்தில் எப்படியிருக்கும்? நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், பத்திர சந்தை ஏற்றம், டாலர் மதிப்பு என பலவும் தங்கம் விலையில் மீடியம் டெர்மில் எதிரொலிக்கலாம். இதே தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், ரஷ்யா – உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதற்றம் உள்ளிட்டவை, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பிரதிபலிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

மேற்கண்ட அனைத்து காரணிகளும் பாதுகாப்பு புகலிடமான தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏற்ற இறக்கத்தின் மத்தியில் வெள்ளியின் விலையானது 60,000 – 58000 ரூபாயினை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் உடனடி ரெசிஸ்டன்ஸ் லெவல் 65,500 ரூபாயினை உடைக்கலாம். இதனை உடைத்தால் 67,500 ரூபாயினை உடைக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

வெள்ளியின் இலக்கு விலை
 

வெள்ளியின் இலக்கு விலை

அடுத்த 12 – 15 மாதங்களில் வெள்ளி விலையானது 25% அதிகரிக்கலாம் எனவும், இதன் அடுத்த டார்கெட் 72,250 ரூபாயாகவும், அடுத்ததாக 80,000 ரூபாயினையும் இலக்காக வைத்துள்ளனர்.

வெள்ளியின் தேவையானது அவுன்ஸுக்கு 2022ல் 1.112 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வெள்ளியின் தொழிற்துறை பயன்பாடு மற்றும் பிசிகல் தேவையானது இரண்டிலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

பிசிகல் வெள்ளியின் தேவையானது 2022ல் 13% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 7 வருட உச்சத்தினை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வெள்ளி ஆபரண பயன்பாடு மற்றும் தேவையானது முறையே 11% மற்றும் 21% அதிகரிக்கலாம்.

இடிஎஃப்

இடிஎஃப்

கடந்த ஆண்டில் இடிஎஃப்-ல் இருந்து மொத்தம் 870 டன்கள் வெளியேற்றம் இருந்தது. எனினும் நடப்பு ஆண்டின் முதல் இரண்டு மாதத்தில் 425 டன்கள் வரத்து உள்ளது. ஆக இதுவே முதலீட்டு தேவையானது எந்தளவுக்கு உள்ளது என்பதை பார்க்க முடிகிறது.

உள்நாட்டில் தங்க இடிஎஃப்களுக்கு ஆதரவு அதிகம் என்றாலும், வெள்ளி இடிஎஃப் என்பது சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு தொழில்துறையிலும் தேவை அதிகம் என்பதால் நடப்பு ஆண்டில் வெள்ளியின் விலை நல்ல ஏற்றத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்துறை உலோகம்

தொழில்துறை உலோகம்

மொத்தத்தில் வெள்ளியின் தேவை அதிகரிப்பானது விலையில் பிரதிபலிக்கலாம். குறிப்பாக மின்சார வாகனங்கள் தேவை, சோலார் பேனல்கள், பசுமை ஆற்றல் உள்ளிட்ட பவற்றிற்கும் மத்தியில் வெள்ளியின் தேவையானது இன்னும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். இது வெள்ளி விலைக்கு சாதகமாக அமையலாம்.

தங்கம்

தங்கம்

வெள்ளியினை போலவே தங்கத்திற்கான முதலீட்டு தேவையும் அதிகம். இதன் காரணமாக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். இது வரலாற்று உச்சத்தினை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவின் மத்தியில் சாதரண மக்கள் தங்கத்தின் மீதான ஆர்வத்தினை குறைத்திருந்தாலும், முதலீட்டாளர்களின் ஆர்வமானது மேற்கொண்டு தங்கம் விலையினை மேலாக இருக்க உதவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

silver may touch to Rs.80,000 per kg over next 12 – 15 months, gold prices may break last year high

silver may touch to Rs.80,000 per kg over next 12 – 15 months, gold prices may break last year high/வெள்ளி விலை ரூ.80,000-ஐ தொடலாம்.. தங்கத்தின் இலக்கு என்ன.. நிபுணர்கள் பரபர கணிப்பு!

Story first published: Friday, February 11, 2022, 16:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.