12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்| Dinamalar

வெள்ளி முதல் வியாழன் வரை (11.2.2022 – 17.2.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்

சூரியன், புதன், குரு சிறப்பாக உள்ளனர். திருமகள் வழிபாடு நிம்மதி தரும்

அசுவினி: நோய் பாதிப்புகள் நீங்கும். தொற்று வராமல் பார்த்துக் கொள்வீர்கள். மருத்துவ செலவு குறையும்.வெற்றிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பரணி: குடும்பத்தில் குழந்தைகளின் செயல்பாடுகளால் சந்தோஷம் உண்டு. வண்டி வாகன வசதி ஏற்படும். குடும்பம் குதுாகலமாக இருக்கும். புதிய நண்பர்களால் நன்மை உண்டாகும்.


கார்த்திகை 1ம் பாதம்: பேச்சில் கடுமை வராதபடி கவனமாக இருக்கவும். அப்பாவின் ஆரோக்கியத்தில் முன்பிருந்த பிரச்னைகள் மாறி ஆரோக்கியம் மீளும். பணபிரச்னை தீரும்.

ரிஷபம்

புதன், சூரியன், சுக்கிரனால் சுபபலன் உண்டு. தட்சிணாமூர்த்தி வழிபாடு சுபிட்சமளிக்கும்.

கார்த்திகை 2,3,4: வேலை விஷயமாக எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். எந்த பிரச்னை வந்தாலும் சமாளிப்பீர்கள்.

ரோகிணி: வேலையில் கவனம் தேவை. பணியிடத்தில் திட்டமிட்டு வேலை செய்து படிப்படியாக நன்மை காண்பீர்கள். மருத்துவச் செலவுகள் முடிவுக்கு வரும்

மிருகசீரிடம் 1,2: வேலை செய்யும் இடத்தில் பொறுமை தேவை. மறதி ஏற்பட வாய்ப்பிருப்பதால் எந்தச் செயலிலும் கவனமாக இருங்கள். தங்க நகைகளை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

மிதுனம்

குரு, ராகு, கேது, நற்பலன் வழங்குவர். நாராயணன் வழிபாடு நலம் தரும்.

மிருகசீரிடம் 3,4: ஆரோக்கியமும் வசீகரமும் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் கவலைகள் நீங்கும். நிறைய உழைத்து அதன் மூலம் நல்ல பலன் அடைவீர்கள்.

திருவாதிரை: முன்கோபத்தை குறைத்துக்கொண்டு நிம்மதி காண்பீர்கள்.. உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் நிம்மதி உண்டு. சவால்களில் ஜெயித்து காட்டுவீர்கள்.

புனர்பூசம் 1,2,3: எதையும் சமாளிக்கும் தைரியம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

கடகம்

புதன், சந்திரன் நற்பலனைத் தருவர். குரு வழிபாடு கஷ்டம் போக்கும்.

புனர்பூசம்4: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பழைய நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் விரயங்கள் ஏற்படாதபடி திட்டமிட்டுச் செலவு செய்யுங்கள். உடல்நலனில் அலட்சியம் வேண்டாம்.

பூசம்: உணவுக்கட்டுப்பாடு அவசியம். நேரம் தவறிக் கடமைகளைச் செய்யாதபடி முன்னரே திட்டமிடுங்கள். சோம்பலும் சோர்வும் அண்டாமல் சுறுசுறுப்புடன் செயல்படுங்கள்.

ஆயில்யம்: கணவன், மனைவி இடையே வாக்கு வாதங்கள் வரலாம். தான் என்ற அகங்காரம் தலைதுாக்காதபடி கவனமாக இருங்கள். வியாபாரம் உங்கள் கவனக்குவிப்புக்கு ஏற்ற பலன் தரும்.

சிம்மம்

குரு, சனி, புதன், சுக்கிரன் சாதக பலன் தருவர். முருகன் வழிபாடு கஷ்டம் போக்கும்.

latest tamil news

மகம்: இரவு நேரப் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். வேலை செய்யும் இடத்தில் சவால்கள் வந்தாலும் அவற்றை சமாளிப்பீர்கள். பிள்ளைகளால் செலவுகள் வரலாம்.

பூரம்: வளர்ச்சி அதிகரிக்கும். மனதில் நினைப்பது நடக்கும். திடீர் லாபங்கள் வரும். உழைப்பினால் மட்டுமன்றி அதிர்ஷ்டத்தாலும் நன்மை, லாபத்தை எதிர்பார்க்கலாம்.

உத்திரம் 1: சமூகத்தில் கவுரவம் அதிகரிக்கும். அதிகாரமுள்ள பதவி கிடைக்கும். வீடு, மனை வாங்கலாம். பிள்ளைகளின் கல்விக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும்.

கன்னிசுக்கிரன் புதன் நன்மை தர உள்ளனர். குருவாயூரப்பன் வழிபாடு நலம் தரும்.

உத்திரம் 2,3,4: உங்களின் மீது அக்கறை மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும். எடுத்த முயற்சி நிதானமாகவும் படிப்படியாகவும் வெற்றி பெறும். சேமிக்கும் எண்ணம் உருவாகும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அஸ்தம்: தெய்வப் பற்றும் ஆன்மிக சிந்தனையும் மேலோங்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். கூட்டுத் தொழிலில் லாபம் சுமாராக உண்டு. தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் சிறிய அளவில் கிடைக்கலாம்.

சித்திரை1,2: சிந்தித்து நிதானமாகச் செயல்படுவோருக்கு பிரச்னை வராது.

துலாம்

குரு, புதன், கூடுதல் நலன்கள் அளிப்பர். சிவன் வழிபாடு நிம்மதி தரும்.

சித்திரை 3,4: லாபம் அதிகரிக்கும். பெற்றோரின் உடல்நலனில் அக்கறை கூடுதலாகும். பேச்சுவார்த்தையில் உற்சாகம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.

சுவாதி: சவால்களை ஜெயித்து காட்டுவீர்கள். வீடு இடமாற்றம் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கலாம். முனைப்புடன் செய்யும் செயல்கள் நற்பலன்களைத் தரும். கவலை ஒன்று விடாமுயற்சியால் முயற்சியால் முடிவுக்கு வரும்.

விசாகம் 1,2,3: வாகனங்களை செப்பனிட்டுக் கொள்வீர்கள். மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்து வாழ்த்து பெறுவீர்கள். உழைப்பால் நன்மைகளை அடைவீர்கள். தந்தையின் தேவையறிந்து உதவுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 9.2.2022 காலை 7:14 மணி – 11.2.2022 மாலை 6:45 மணி

விருச்சிகம்

குரு, சுக்கிரன், சனி சுபிட்சமான பலன் தருவர். நந்தி வழிபாடு நன்மை தரும்.

விசாகம் 4: தொழில், பணி விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் சாதமாக பயணம் செய்கிறார். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

அனுஷம்: பழைய கடன்களை அடைப்பீர்கள். வீடு, நிலம் வாங்கி விற்கும் முயற்சி சிறப்பான பலனை அளிக்கும். கணவர்/ மனைவியின் எல்லா செயல்களும் விடாமுயற்சியின்பேரில் சிறப்படையும்.

கேட்டை: எதிர்பாலினத்தினரால் நன்மை உண்டாகும். கவரும் தன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகம் நிலவும். பணியிடத்தில் இருந்த சூழ்நிலை மாறி நிம்மதி பெருகும். பேச்சிலும், செயலிலும் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 11.2.2022 மாலை 6:45 மணி – 14.2.2022 காலை 6:18 மணி

தனுசு

புதன், ராகு, கேதுவால் நன்மை கூடும். அனுமன் வழிபாடு அமைதி தரும்.

மூலம்: தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டு. உடல்நலனில் அக்கறை தேவை. பெற்றோர் நலனில் அக்கறை காட்டுங்கள்.

பூராடம்: வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சில் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடுதலாகும்.

உத்திராடம்1: உடன் பணிபுரிவோர் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். தொழிலில் லாபம் பெருகும். சகோதரர்கள் வாழ்க்கையில் உயர்வர். பிறருக்கு உதவி செய்து ஆசி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 14.2.2022 காலை 6:18 மணி – 16.2.2022 மாலை 4:12 மணி

மகரம்

குரு, கேது, சந்திரன் நன்மை தருவர். ராமர் வழிபாடு வளம் தரும்.

உத்திராடம் 2,3,4: பணியிடத்தில் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். நியாயத்துக்குப் புறம்பாக செயல்படும்படி யார் துாண்டினாலும் புறக்கணியுங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையளிக்கும்.

திருவோணம்: நண்பர் வட்டம் விரிவடையும். உறவினரின் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழிலில் அக்கறை செலுத்தினால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.

அவிட்டம் 1,2: பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். எந்த விஷயத்தையும் இப்போது செய்வோமா பிறகு செய்வோமா என்று யோசிப்பீர்கள்.

சந்திராஷ்டமம்: 16.2.2022 மாலை 4:12 மணி – 18.2.2022 இரவு 11:45 மணி

கும்பம்

சுக்கிரன், செவ்வாய், குருவால் நன்மை பெருகும். பெருமாள் வழிபாடு பலம் சேர்க்கும்.

அவிட்டம் 3,4: தொழிலில் லாபம் மிதமாக இருக்கும். பேச்சில் அகங்காரம் தலைதுாக்காமல் கவனமாக இருங்கள். நண்பர்கள் மீது நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

சதயம்: திருமண பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடியும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

பூரட்டாதி1,2,3: செலவுகள் அதிகரித்தாலும் சமாளிப்பீர்கள். தந்தையின் வாழ்வில் சந்தோஷம் கூடும். திடீர் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். எதிர்பாராத நன்மைகள் சேரும்.

மீனம்

ராகு, புதன், சனி நற்பலன்களை வழங்குவர். குரு வழிபாடு நம்பிக்கை தரும்.

பூரட்டாதி 4: வீடு, மனை வாங்க இந்த வார கிரகநிலை சாதகமாக உள்ளது. பணியிடத்தில் அக்கறை தேவை. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டுமே நம்புவது நல்லது.

உத்திரட்டாதி: பூர்வீகச் சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொல்லை தந்த நபர்களின் பலம் குறையும். தொலைபேசி மூலம் தித்திக்கும் செய்தி வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

ரேவதி: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவோடு தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய தொழில் சம்பந்தமான பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.