22 ஆண்டாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்த நபர்! திடீரென பெரும் கோடீஸ்வரர் ஆனது எப்படி?


இந்தியாவில் தொழிலாளி ஒருவருக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்று பரிசாக கிடைத்துள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை வசித்து வருபவர் ஏ.கே.ஷாஜி. இவர் மைஜி என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை பல வருடங்களாக நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தில் சிஆர் அனிஷ் என்பவர் சுமார் 22 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஏ.கே.ஷாஜி, அனிஷுக்கு இத்தனை ஆண்டுகாலம் விசுவாசமாக பணியாற்றியதற்கு பரிசு ஒன்று கொடுக்க நினைத்துள்ளார்.

அந்தவகையில் சுமார் 1 கோடி மதிப்புள்ள பென்ஸ் ஜிஎல்ஏ கிளாஸ் 220 டி கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதுகுறித்து ஷாஜி தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, அன்புள்ள அனி கடந்த 22 வருடங்களாக நீங்கள் எங்கள் நிறுவனத்தில் விசுவாசமாக பணியாற்றியதற்கு எனது நன்றிகள்.

இதற்காக இப்போது உங்கள் புதிய பயணக் கூட்டாளியை நீங்கள் நேசிப்பீர்கள் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். ஷாஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஆறு ஊழியர்களுக்கு தலா ஒரு காரை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.   Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.