3 நாளில் 65% உயர்வு.. அசத்தும் அதானி நிறுவனம்.. முதலீட்டாளர்களுக்கு செம லாபம்..!

இந்திய பங்குச்சந்தையில் சமீபத்தில் ஐபிஓ வெளியிட்ட பல நிறுவனங்கள் மிகவும் குறைந்த லாபத்தை மட்டுமே கொடுத்த நிலையில், ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஐபிஓ மீதான நம்பிக்கை பெரிய அளவில் குறைந்தது.

இதற்கு முதலும் முக்கியக் காரணம் பேடிஎம் நிறுவனத்தின் மோசமான சரிவு தான். பேடிஎம் நிறுவனத்தைப் போலவே அடுத்தடுத்து பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிந்த நிலையில், முதலீட்டாளர்கள் எல்ஐசி ஐபிஓ-விற்காகக் காத்திருந்த நிலையில் கௌதம் அதானி சரியான நேரத்தில் சமையல் எண்ணெய் நிறுவனமான அதானி வில்மார் நிறுவனத்தின் ஐபிஓ-வை வெளியிட்டார்.

சமையல் எண்ணெய்

இந்தியாவில் உணவு பொருட்கள் மீதான பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கச் சமையல் எண்ணெய் விலை மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலையைக் குறைக்கப் பல தளர்வுகள் அறிவித்துள்ளது.

 விரிவாக்க திட்டம்

விரிவாக்க திட்டம்

இந்தச் சூழ்நிலையில் மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்துடன் இருக்கும் அதானி வில்மார் நிறுவனத்தின் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 தென் இந்திய நிறுவனங்கள்
 

தென் இந்திய நிறுவனங்கள்

குறிப்பாக அதானி வில்மார் நிறுவனம் தென் இந்திய பகுதிகளில் இருக்கும் சிறு மற்றும் குறு எண்ணெய் நிறுவனங்களைக் கைப்பற்றும் திட்டத்தை அறிவித்த பின்பு அதானி வில்மார் ஐபிஓ மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் அதிகரித்தது.

 ஐபிஓ முதலீடு

ஐபிஓ முதலீடு

ஆனால் ஐபிஓ முதலீட்டில் கடந்த சில மாதத்தில் ஏற்பட்ட சரிவில் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வர முடியாத காரணத்தால் 3-4 சதவீத டிஸ்கவுன்ட் விலையில் தான் அதானி வில்மார் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

 65.65 சதவீத வளர்ச்சி

65.65 சதவீத வளர்ச்சி

அதானி வில்மார் பட்டியலிடப்பட்ட பின்பு தொடர் உயர்வைச் சந்தித்து வருகிறது, அதானி வில்மார் பங்குகள் 230 ரூபாய் விலையில் ஐபிஓ வெளியிட்ட நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 65.65 சதவீதம் அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களில் பிப்ரவரி 10ஆம் தேதி 20 சதவீத அப்பர் சர்கியூட் அளவீட்டைத் தொட்டு 381 ரூபாய் என்ற புதிய உச்ச விலையைத் தொட்டு உள்ளது அதானி வில்மார் பங்குகள்.

 50,000 கோடி ரூபாய் மதிப்பீடு

50,000 கோடி ரூபாய் மதிப்பீடு

இந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் அதானி வில்மார் பங்குகள் சந்தை மதிப்பு 50,000 கோடி ரூபாய் அளவில் உயர்ந்து 95வது இடத்தில் உள்ளது. மேலும் சந்தை மதிப்பில் அதானி வில்மார் நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், பயோகான் லிமிடெட், எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ், Bosch, டாடா எலக்சி, ஹெச்டிஎப்சி அசெட் மேனேஜ்மென்ட் கோ, ஏபிபி இந்தியா, பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்டார் ஹெல்த் அலைட் இன்சூரன்ஸ் ஆகிய பல முன்னணி நிறுவனங்களை ஓரம்கட்டியுள்ளது.

 பிப்ரவரி 11 நிலவரம்

பிப்ரவரி 11 நிலவரம்

பிப்ரவரி 11ஆம் தேதி காலை வர்த்தகத் துவக்கத்தில் (காலை 9.39) அதானி வில்மார் பங்குகள் 7.95 சதவீதம் உயர்ந்து 416.40 ரூபாயை தொட்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் சந்தை மதிப்பு 53,748.21 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 அதானி - வில்மார்

அதானி – வில்மார்

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் சிங்கப்பூர் வில்மார் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகிய இரு நிறுவனத்தின் கூட்டணியில் உருவான நிறுவனம் தான் அதானி வில்மார். இந்த நிறுவனத்தின் கீழ் ஃபார்ச்சூன் பிராண்டு சமையல் எண்ணெய் உள்ளது.

 20 சதவீத வர்த்தகம்

20 சதவீத வர்த்தகம்

இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சோயா பீன், சூரியகாந்தி, கடுகு மற்றும் அரிசி தவிடு ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெயை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. பார்ச்சூன் பிராண்ட் எண்ணெய் இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20% சந்தை பங்கைக் பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani Wilmar shares jump 65 percent just in 3 days, IPO magic returns in India

Adani Wilmar shares jump 65 percent just in 3 days, IPO magic returns in India 3 நாளில் 65% உயர்வு.. அசத்தும் அதானி நிறுவனம்.. முதலீட்டாளர்களுக்கு ஏகப்பட்ட லாபம்..!

Story first published: Friday, February 11, 2022, 10:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.