Rajinikanth: 'தலைவர் 169' கண்டிப்பா ஹிட்டுங்க… ஏன்னா..?


தலைவர் 169
‘ அறிவிப்பு வெளியானதில் இருந்தே கோலிவுட் வட்டாரம் பரபரப்பாக உள்ளது. ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினி யாருடன் இணைய போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இளம் இயக்குனர் நெல்சனை டிக் அடித்துள்ளார்
ரஜினிகாந்த்
. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

கடந்த தீபாவளிக்கு வெளியான ‘அண்ணாத்த’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் ரஜினியின் ‘தலைவர் 169’ பட அப்டேட் மாஸாக வெளியானது.
சன் பிக்சர்ஸ்
தயாரிக்கும் இந்தப்படத்தை
நெல்சன் திலீப்குமார்
இயக்குகிறார். அனிருத் இசையமைக்கவுள்ளார். டார்க் காமெடியில் கலக்கும் நெல்சன், ரஜினியுடன் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

அஜித்தை பற்றி அப்படி பேசுனது என்னோட தப்புதான்: குமுறும் இயக்குனர் சுசீந்திரன்..!

‘தலைவர் 169’ அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் பலவித எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்தது. ரசிகர்கள் பலரையே இந்தப்படம் ஏமாற்றியது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப்படத்தை போல ‘தலைவர் 169’ ஏமாற்றாது என உறுதியாக கூறுகின்றனர் ரசிகர்கள்.

ஏனென்றால் ‘அண்ணாத்த’ படத்தின் கதையை ரஜினி ஓகே பண்ணினாராம். ஆனால் ‘
பீஸ்ட்
‘ படத்தில் நெல்சன் வேலையை பார்த்து ‘தலைவர் 169’ பட வாய்ப்பை கொடுத்துள்ளாராம் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். அதே போல் ஹுயூமரில் கலக்கும் ரஜினியும், டார்க் காமெடியில் பின்னியெடுக்கும் நெல்சனும் இணைவதால், ‘தலைவர் 169’ படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என அடித்து கூறுகின்றனர் ரசிகர்கள்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.