அம்மாடியோவ்… ஒரு மாம்பழ பெட்டியின் விலை இவ்வளவு ஆயிரமா?-கெத்துக்காட்டிய வியாபாரிகள்!

நாடு முழுவதும் தற்போது
மாம்பழ சீசன்
தொடங்கி உள்ளது. சீசன் தொடக்கத்தில் சந்தைக்கு வரும் முதல் பெட்டியை ஏலம் எடுத்தால், வியாபாரம் அமோகமாக நடைபெற்று செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கை புனே நகர வியாபாரிகள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், ரத்னகிரியில் விளைந்த இந்த சீசனின் முதல் அல்போன்சா வகை மாம்பழ பெட்டி புனே சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. இதனை வாங்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.

5000 ரூபாய்க்கு ஆரம்பித்த ஏலம் 10 ஆயிரம், 20 ஆயிரம் என்று ஏறிக்கொண்டே போனது. ஏலத்தின் முடிவில் யுவராஜ் என்ற வியாபாரி 31 ஆயிரம் ரூபாய்க்கு மாம்பழ பெட்டியை ஏலம் எடுத்தி அசத்தினார். கடந்த அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மாம்பழம் அதிக விலைக்கு ஏலம் போய்வுள்ளதாத வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வடமாநிலங்களில் பிப்ரவரியில் தொடங்கும் மாம்பழ சீசன் தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.