இதெல்லாம் தலைவரால் மட்டும்தான் பண்ண முடியும்: மாஸ் காட்டும் ரஜினி ரசிகர்கள்..!

சன் பிக்சர்ஸ்
தயாரிப்பில் சிவா இயக்கத்தில்
ரஜினிகாந்த்
நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் பலத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படங்களின் இயக்குனர்களின் பட்டியலில் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது.

இதனிடையில் அண்மையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் – தனுஷும் பிரிவதாக அறிவித்தனர். இதனால் தொடர்ந்து ரஜினி தனிமையில் இருப்பதாகவும், சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Rajinikanth: ‘தலைவர் 169’ கண்டிப்பா ஹிட்டுங்க… ஏன்னா..?

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஜினியின் ‘
தலைவர் 169
‘ பட அப்டேட் மாஸாக வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனருடன் ரஜினி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் ‘தலைவர் 169’ அறிவிப்பு யூடியுப்பில் 24 மணி நேரத்தில் 3.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். டீசர், டிரெய்லரை எல்லாம் தாண்டி பட அறிவிப்பிற்கே தலைவரால் மட்டுமே இதெல்லாம் பண்ண முடியும் என கெத்தாக கூறி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.