இந்தியாவில் 50 ஆயிரத்திற்கு குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு – முழு விவரம்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சரிந்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 50,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் ஜனவரி மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது நாளுக்கு நாள் மளமளவென குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 67 ஆயிரத்து 84 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 77 ஆக சரிந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 50,407 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 13 சதவிகிதம் குறைவானதாகும்.
கொரோனா நிலவரம் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50,407 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,25,86,544 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரேனா தொற்றால், ஒரே நாளில் 804 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,07,981 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,36,962 பேர் குணமாகியுள்ளனர்.
image
இதனால் கொரோனா பாதிப்பால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,14,68,120 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம். குணமடைவோர் விகிதம் 97.37 சதவிகிதமாக உள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 6,10,443 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,72,29,47,688 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46,82,662 பேருக்கு கொரேனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் விகிதம் 3.48 சதவிகிமாக சரிந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.