என்னது டைரக்டர் நெல்சனுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிடுச்சா? அட! குழந்தை கூட இருக்கா?

கோலமாவு கோகிலா படத்தின் மூலம்’ தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குனருக்கான சைமா விருதையும் வென்றார்.

தொடர்ந்து தனது நெருங்கிய நண்பன் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன். கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் இந்த படம் வெளியாகி’ பெரிய வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. தொடர் ஊரடங்கால், வீடுகளுக்குள்ளே முடங்கியிருந்து மன அழுத்தம் ஏற்பட்ட ரசிகர்களுக்கு டாக்டர் படம் ஒரு சிறந்த ட்ரீட் ஆக இருந்தது.

அடுத்ததாக நெல்சன்’ தளபதி விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்’ சில தினங்களுக்கு முன், பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பயங்கர ஹைப்-ஐ கிளப்பியது.

அதற்குள் நெல்சன் குறித்த அதிரடி செய்தி ஒன்று இணையத்தில் தீயாக வைரலாகியது. நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது. இப்போது’ அதே பேனரில் நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்தில் வெளியானது. தற்போதைக்கு இந்த படத்துக்கு #தலைவர்169 என பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரசிகர்கள் பலரும் இணையத்தில் நெல்சன் குறித்த தகவல்களை தேடத் தொடங்கினர். அப்போதுதான் நெல்சனுக்கு ஏற்கெனவே கல்யாணமாகி குழந்தை இருப்பது தெரியவந்தது.

இயக்குனர் நெல்சனின் மனைவி பெயர் மோனிஷா. இவர்களுக்கு ஆறு வயதில் ஆத்விக் என்ற மகன் இருக்கிறான். சினிமாவுக்கு வருவதற்கு முன், நெல்சன் விஜய் டிவியில்’ தான் பல ரியாலிட்டி ஷோக்களின் இயக்குனராக பணியாற்றினார்.

அந்தவகையில் நெல்சன், அவரது மனைவி மோனிஷா, சிவகார்த்திகேயன், டிடி, கவீன், பிக்பாஸ் வின்னர் ராஜூ, நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இவர்கள் எல்லாம் ஏற்கெனவே நெருங்கிய நண்பர்கள். அதில் மோனிஷாவும், டிடி-யும் மிகவும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர்.

நெல்சனுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி’ குழந்தை இருப்பதை அறிந்த ரசிகர்கள் இப்போது அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க!

முயற்சி திருவினையாக்கும்.. நிரூபித்த நெல்சன்.. சின்னத்திரை இயக்குனர் டு மோஸ்ட் வான்டட் டைரக்டர்!


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.