ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் அமோகம்| Dinamalar

பெங்களூரு: ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று (பிப்.,12) துவங்குகியது. இதில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.12.25 கோடிக்கு கோல்கட்டா அணி ஏலம் எடுத்துள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் 15வது சீசன் இந்த ஆண்டு நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி, பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத் என, 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ, குஜராத் என இரு புதிய அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ‘மெகா’ ஏலம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடக்கவுள்ளன.

590 வீரர்கள்

இந்த ஏலத்தில் பங்கேற்ற 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதிலிருந்து 590 பேர் (228 சர்வதேச, 355 உள்ளூர், 7 உறுப்பு அணி வீரர்கள்) இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். அதிகபட்ச அடிப்படை ஏலத் தொகை ரூ. 2 கோடி பட்டியலில் 48 பேர், ரூ. 1.5 கோடி பட்டியலில் 20 பேர், ரூ. ஒரு கோடி பட்டியலில் 34 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அணிகள் ஏலம் எடுத்த வீரர்கள் பின் வருமாறு

சென்னை அணி

விண்டீசின் டுவைன் பிராவோ (4.4 கோடி), ராபின் உத்தப்பா (ரூ.2 கோடி)

பெங்களூரு அணி

ஹர்சல் படேல் ( ரூ.10.75 கோடி), தென் ஆப்ரிக்க வீரர் டுபிளசி (ரூ. 7 கோடி) ,

ராஜஸ்தான் அணி

நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்ட்( ரூ. 8 கோடி), அஸ்வின் (ரூ.5 கோடி), படிக்கல்( ரூ.7.75 கோடி), விண்டீஸ் வீரர் ஹெட்மயர்(ரூ.8.5 கோடி)

பஞ்சாப் அணி

தென் ஆப்ரிக்க வீரர் ரபாடா( ரூ.9.25 கோடி), ஷிகார் தவான் (ரூ.8.25 கோடி),

கோல்கட்டா அணி

ஸ்ரேயஸ் ஐயர் (ரூ.12.25 கோடி), ஆஸி., வீரர் பேட் கம்மின்ஸ்( ரூ.7.25 கோடி), நிதிஷ் ராணா (ரூ.8 கோடி)

குஜராத் அணி

முகமது ஷமி (ரூ.6.25 கோடி)

டில்லி அணி

ஆஸி., வீரர் டேவிட் வார்னர் (ரூ.6.25 கோடி)

லக்னோ அணி

தென் ஆப்ரிக்க வீரர் குயின்டான் டி காக்( ரூ.6.75 கோடி), மணிஷ் பாண்டே (ரூ.4.6 கோடி), விண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர்(ரூ.8.75 கோடி), தீபக் ஹூடா(ரூ.5.5 கோடி)க்கும் ஏலம் எடுத்தன.

சுரேஷ்ரெய்னாவை இதுவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.