ஒரு பெட்டி 31 ஆயிரம் ரூபாய்; ஏலம் எடுக்க போட்டா போட்டி.. தெறிக்கவிட்ட ’அல்போன்சா’ மாம்பழம்

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் ஒரு பெட்டி மாம்பழம் 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட விநோதம் நிகழ்ந்துள்ளது.
சந்தைக்கு வரும் முதல் மாம்பழ பெட்டியை ஏலம் எடுத்தால் செல்வம் கொழிக்கும் என்பது புனே நகர வியாபாரிகளின் நம்பிக்கை. இந்நிலையில் சந்தைக்கு வந்த ரத்னகிரி அல்போன்சோ வகை மாம்பழத்தின் முதல் பெட்டி 5 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் அறிவிக்கப்பட்டது. இதில் கடும் போட்டி நிலவியதை அடுத்து யுவராஜ் கச்சி என்பவர் 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக விலைக்கு ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாம்பழம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை - Simple tips for purchasing mangoes
இது தொடர்பாக யுவராஜ் கச்சி பேசுகையில், ‘“இந்த பருவத்தின் முதல் மாம்பழங்கள் இவை. முதல் லோடு சந்தைக்கு வரும்போது, இப்படி ஏலம் விடப்பட்டு, வியாபாரிகள் அதை வாங்க முயல்கின்றனர்,” என்றார். இந்த ஆண்டு, ஏலம், 5,000 ரூபாய்க்கு துவங்கி, 31,000 ரூபாய் ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.