கெத்தாக வந்த நீதா அம்பானி.. கோபமாக வெளியேறினாராம்.. ஏன் தெரியுமா..?!

இந்த வருடத்திற்கான ஐபிஎல் சீசன் துவங்கியுள்ளது, மிகப்பெரிய வர்த்தகக் கனவுகள் உடன் 10 அணிகள் உடன் ஐபிஎல் 2022க்கான ஐபிஎல் ஏலம் இன்று பெங்களூரில் துவங்கியது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டபோது, கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனால் வழக்கம் போல் இந்த ஐபிஎல் ஏலத்தை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர். குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகக் குழு உறுப்பினரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் தலைவருமான நீதா அம்பானியை கலாய்த்து தள்ளியுள்ளது.

வைப்பு நிதி வட்டி குறைப்பு.. 2 வங்கி முடிவால் மக்கள் அதிர்ச்சி..!

 ஐபிஎல் ஏலம் 2022

ஐபிஎல் ஏலம் 2022

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டியின் ஸ்பான்சர்ஷிப்-ஐ டாடா கைப்பற்றியுள்ள காரணத்தால் எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி சார்பாகச் சன் டிவி குரூப் தலைவர் கலாநிதி மாறனின் மகளும் சன் டிவியின் இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனரான காவ்யா கலாநிதி மாறன் கலந்துகொண்டார்.

இதேவேளையில் பஞ்சாப் அணியில் ப்ரீத்தி ஜின்தா வராதது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் சோகக்தை ஏற்படுத்தியுள்ளது.

 நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி

நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி

டாடா ஐபிஎல் 2022ல் ஐபிஎல் ஏலத்திற்கு நீதா ஆம்பானி மாஸ்க் உடன் கலந்துகொண்டார், இதேவேளையில் அவருடைய மகன் ஆகாஷ் ஆம்பானி கோட்சூட் அணிந்து ஜாகீர் கான், மஹிலா ஜெயவர்த்தனே உடன் கலந்துகொண்டார்.

இந்நிலையில் நெட்டிசன்கள் பிற அணி தலைவர்களைக் காட்டிலும் நீதா அம்பானியையும், மும்பை இந்தியன்ஸ் அணியையும் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

 கோபமாக வெளியேறினார் நீதா
 

கோபமாக வெளியேறினார் நீதா

ஐபிஎல் ஏலத்தின் போது அப்பையர் பெயர்கள் அழைக்கப்பட்ட போது, ஏலப் பலகையை உயர்த்த முடியாது என்று கூறியதையடுத்து, ஏல நிகழ்ச்சியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நீதா அம்பானி கோபத்துடன் வெளியேறினார் என ராமா கிருஷ்ணா என்பவர் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

 பண மூட்டை

பண மூட்டை

இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் கடுமையாக இருக்கும் என்பதால் எப்படியாயினும் சிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கட்டாயம் ஏலத்தில் எடுத்துவிட வேண்டும் என்பது மும்பை இந்தியன்ஸ் அணியின் திட்டமாக உள்ளது.

இதைக் கிண்டல் செய்யும் விதமாக ஹாலிவுட் நடிகர் மிகப்பெரிய ஹேண்ட் பேக் முழுவதும் பணத்தைக் கொண்டு செல்லும் போட்டோவை நீதா அம்பானி ஐபிஎல் ஏலத்திற்குச் செல்கிறார் என நைடிக் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 அம்பையர்கள்

அம்பையர்கள்

யார் யார் எந்த வீரர்களை ஏலத்தில் பெறுகிறார்கள் என டிவிட்டர் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அப்டேட் செய்து வந்த நிலையில் டிரென்ட் பவுல்ட்-ஐ இழந்தது குறித்து ட்வீட் செய்யப்பட்ட போது XYZ என்பவர் அம்பையர்களை மும்பை இந்தியன்ஸ் கைப்பற்றியுள்ளது எனக் கலாய்த்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IPL Auction: Netizens trolls Nita ambani and Mumbai Indians teams on umpire sold to them

IPL Auction: Netizens trolls Nita ambani and Mumbai Indians teams on umpire sold to them கெத்தாக வந்த நீதா அம்பானி.. கோபமாக வெளியேறினாராம்.. ஏன் தெரியுமா..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.