சாங்கி:
சர்வதேச விமான தொழில்துறை சார்பில் நடத்தப்படும் சிங்கப்பூரில் விமான கண்காட்சி வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.   இரண்டாண்டுக்கு ஒருமுறை சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை  காட்சிப்படுத்த இந்த கண்காட்சி வழிவகுத்துள்ளது.
நடப்பாண்டு கண்காட்சியில் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் எம்கே-I போர் விமானத்தை இந்திய விமானப்படை காட்சிப் படுத்தவுள்ளது. 
 தேஜாஸ் விமானம் அதன் சிறந்த கையாளுதல் பண்புகள் மற்றும் திறனை வெளிப்படுத்தும்  மூலம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படை பங்கேற்பதன் மூலம், தேஜாஸ் விமானத்தை காட்சிப்படுத்தவும்,பிற பங்கேற்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.  
இதற்காக 44 பேர் கொண்ட இந்திய விமானப்படையினர் சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தனர். 
கடந்த காலங்களில், இந்திய விமானப்படை மலேசியாவில் மற்றும் துபாய் விமான கண்காட்சிகளில்  பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்… பாகிஸ்தானில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை: இம்ரான்கான்
