எஸ்.ஐ.ஆர். படிவத்திற்கான ஆவணமாக, ஆதாரை மட்டுமே ஏற்க வேண்டும்! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டில்,  எஸ்.ஐ.ஆர். படிவத்திற்கான ஆவணமாக, ஆதாரை மட்டுமே ஏற்க வேண்டும், கூடுதல் ஆவணங்கள் கேட்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் எழுதி உள்ளதுரு. எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள் கேட்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் எஸ் ஐ ஆர் பணிகள் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14 … Read more

அசாம்: மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக கூறி தம்பதி உயிருடன் எரித்து கொலை

திஸ்பூர், அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள பெலுகுரி முண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கார்டி பிருவா(43). இவரது மனைவி மிரா பிருவா(33). இவர்கள் இருவரும் மாந்திரீகம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தாக கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கார்டி பிருவாவின் வீட்டை அடித்து நொறுக்கினர். பின்னர் கார்டி பிருவா மற்றும் அவரது மனைவி மிரா ஆகிய இருவரையும் அவர்களின் வீட்டு வாசலில் வைத்து … Read more

கோமாவில் இருந்த கிரிக்கெட் வீரர்…8 ஆண்டுகளுக்கு பின் உயிரிழப்பு

கொழும்பு இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ(Akshu Fernando) (வயது 25) வலது கை துடுப்பாட்டக்காரரான பெர்னாண்டோ, 2008 ஆம் ஆண்டில் பாணந்துறை அணிக்காக 23 வயதுக்குட்பட்டோர் போட்டியில் விளையாடியதன் மூலம் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேலும், கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப், பாணந்துறை விளையாட்டுக் கழகம் மற்றும் சிலாவ் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கடந்த 2018 டிசம்பர் 28 அன்று, மவுண்ட் லவ்னியாவில் கடற்கரையில் பயிற்சி அமர்வின் போது, ரெயில் … Read more

வங்காளதேச முன்னாள் பிரதமர் உடல் அடக்கம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியவாத கட்சி தலைவருமானவர் கலிதா ஜியா (வயது 80). இவர் இதயம், நுரையீரல் தொற்று உள்ளிட்ட உடல்நல பிரச்சினை காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, கலிதா ஜியா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு நாடுகளில் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேவேளை கலீதா ஜியாவின் மறையை தொடர்ந்து வங்காளதேசத்தில் 3 … Read more

இன்று 2 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னையில் எப்படி? வானிலை மையம் அலர்ட்!

Rain Alert: தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகை: சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 77,392 பேர் முன்பதிவு!

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி,  சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 77,392 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு  விடுமுறை தினங்கள், வார விடுமுறை, பண்டிகைகால விடுமுறை நாட்களில் பொதுமக்களின் தேவைக்காக வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. பண்டிகை காலத்திற்கு ஏற்றவாறு குறைந்தது ஆயிரம் முதல் பல ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது. இந்த நிலையில், 2026 ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டியும் சிறப்பு பேருந்துகள் … Read more

உலகில் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்தது

புதுடெல்லி, உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2025-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் இந்தியா ஜப்பானை முந்தி உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இந்த சீரான வளர்ச்சியில் சென்றால் 2030-ம் ஆண்டுக்குள் 7.30 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற … Read more

பெண்கள் ஆக்கி லீக்: ராஞ்சி ராயல்ஸ் அணி வெற்றி

ராஞ்சி, 4 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 2-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 3-வது லீக்கில் ராஞ்சி ராயல்ஸ் அணி, ஷிராச்சி பெங்கால் டைகர்சை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ராஞ்சி அணி 5-0 என்ற கோல் கணக்கில் பெங்கால் டைகர்ஸ் அணியை பந்தாடியது. ராஞ்சி அணியில் ஹன்னா காட்டர் (10-வது நிமிடம்), பியூட்டி டங்டங் (14-வது நிமிடம்), வான் டெர் … Read more

டிஜிட்டல் தகவல் அதிகரிப்பு: அஞ்சல் சேவையை முழுவதுமாக நிறுத்தியது டென்மார்க் அரசு

கோபன்ஹென், டென்மார்க் நாட்டின் அரசு அஞ்சல் சேவை துறை தனது அனைத்து கடித வினியோகங்களையும் இன்றுடன் நிறுத்தி உள்ளது. 400 ஆண்டுகள் பழமையான தனது பொது சேவைகளில் ஒன்றான நாட்டின் அஞ்சல் நிறுவனமான போஸ்ட் நார்ட் தனது இறுதிக்கடித்தை வழங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய கடிதம் வினியோக சேவையை முடிவுக்கு கொண்டு வந்த உலகின் முதல் நாடாக டென்மார்க் உருவெடுத்துள்ளது. நாட்டு மக்கள் டிஜிட்டல் தகவல் தொடர்புகளை அதிகளவில் நம்பியிருப்பதால் அஞ்சல் சேவைகளில் மிகப்பெரிய … Read more

கிருஷ்ணகிரியில் களைகட்டும் 2026 புத்தாண்டு: விதவிதமான கேக் விற்பனை தீவிரம்

2026-ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிக உற்சாகமாகத் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வரும் இந்த நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புத்தாண்டு விற்பனை இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது.