தமிழகத்தில் 3 ஆவது அலை முடிவுக்கு வந்துவிட்டதா? – மா.சுப்ரமணியன் பதில்

தமிழகத்தில் மூன்றாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாகவே எண்ணுவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாமை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டதன் மூலம் தமிழகத்தில் 2 ஆயிரத்து 792 ஊராட்சிகளில் நூறு சதவிகித தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
image
அதே போல் ஒரு சில நகராட்சிகளிலும் நூறு சதவிகித தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக கூறினார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணி காரணமாக அடுத்த சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் குறைந்த அளவிலான மையங்களில் மட்டுமே செயல்படுத்த முடியும் என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.