நீட் தேர்வு கட்டுப்பாடுகளைப் போல டிஆர்பி தேர்வுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள்… ! சர்ச்சை…

சென்னை: நீட் தேர்வு கட்டுப்பாடுகளைப் போல தமிழ்நாடு அரசு நடத்தும் டிஆர்பி தேர்வுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெல்ட், நகை, ஹை-ஹீல்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வு எழுத்தும் மாணாக்கர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.  மாணவர்கள்  முழுக்கை சட்டை அணியக்கூடாது, ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது,  அதேபோல், துப்பட்டா அணிந்த மாணவியர், சேலை கட்டிய மாணவியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  அதேபோல், கை, கால், கழுத்து, காதுகளில் அணிகலன்கள் அணியவும், தலைமுடிக்காக கிளிப் அணியவும் தடை விதிக்கப்பட்டது.  இதுபோன்ற ஆடைக் கட்டுப்பாடுகள் மாணாக்கர்களின் மனநிலையை பாதித்தது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. அரசியல் கட்சிகளும் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று  டிஆர்பி தேர்வு எழுதும் தேர்வர்களுக்கும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தேர்வு மையம் வெகுதூரத்திலும், வேறு மாவட்டங்களிலும் ஒதுக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், தேர்வு எழுத நடத்தப்பட்ட கெடுபிடிக்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதுபோல, 9 மணி தேர்வுக்கு காலை 7:30மணிக்கு வர வேண்டும் என்றும், 8:15 மணிக்கு மேல் வருவரை  ஒருவரையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இநத் நிலையில், இன்று தேர்வை எழுதுபவர்களிடம், அதிகாரிகள் கெடுபிடி செய்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் பல்வேறு பாடங்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) , கணினி பயிற்றுநர்கள் (கிரேடு-1) நியமிக்கப்பட உள்ளனர். 1,960 காலிப் பணியிடங்களுடன் ஏற்கெனவே காலியாக இருந்த 247 இடங்களுடன் சேர்த்து, 2,207 காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

இதற்கான தேர்வு இன்று தொடங்கி 20ந்தேதி வரை நடைபெற உள்ளது.  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று தேர்வுகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளதுடன்,  3 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வு 2 ஷிஃப்டுகளாக நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தேர்வு எழுத வருவோருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்துள்ளது. இதுதொடர்பாக ஹால் டிக்கெட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

* தேர்வர்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் கட்டாயம். ஒரு தவணை தடுப்பூசி போட்டோருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடும் காலக்கெடு முடிந்திருக்கக் கூடாது.

* தடுப்பூசி போடாதோர் தேர்வு நேரத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக ஆர்டிபிசிஆர் சோதனை செய்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும்.

* இதற்காகத் தேர்வர்கள் 1.30 மணி நேரம் முன்னதாக அதாவது முதல் ஷிஃப்டுக்கு 7.30 மணிக்கும், 2-வது ஷிஃப்டுக்கு 12.30 மணிக்கும் வர வேண்டியது அவசியம்.

* தேர்வர்கள் ஹால்டிக்கெட்டுடன் புகைப்படத்தைக் கொண்டு வர வேண்டும். அத்துடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகிய அசல் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துவர வேண்டும்.

* தேர்வர்கள் நகைகளை அணியக்கூடாது.

* பெல்ட் அணிந்திருக்க அனுமதியில்லை. மேலும் ஹைஹீல்ஸ் செருப்புகளுக்கும் அனுமதி இல்லை. சாதாரண செருப்புகளை மட்டுமே அணிந்திருக்க வேண்டும்.

* கால்குலேட்டர்கள், கணித வாய்ப்பாடுகள், டிஜிட்டல் டயரிகள் மற்றும் புத்தகங்களும் தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை.

* தேர்வர்களுக்கு பேப்பர், பேனா மற்றும் பென்சில் ஆகியவை தேர்வுக் கூடத்திலேயே வழங்கப்படும். தேர்வு முடிந்து வெளியே வரும்போது தாங்கள் பெற்ற பேப்பரை மீண்டும் தேர்வு அலுவலரிடமே ஒப்படைத்துவிட வேண்டும்.

* ஹால் டிக்கெட்டைத் தேர்வு மையத்தில் உள்ள தேர்வு அலுவலர் பெற்றுக்கொள்வார். ஆகவே ஹால் டிக்கெட் நகலைத் தங்களிடம் ஒரு காப்பி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

* அதேபோல மொபைல் போன்களுக்கு அனுமதியில்லை. கால்குலேட்டர்கள், கணித வாய்ப்பாடுகள், டிஜிட்டல் டயரிகள் மற்றும் புத்தகங்களுக்குத் தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை.

* தேர்வு மையங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருப்பர்.

* தேர்வு மையத்தில் தடையில்லாத மின்சார வசதி, போதிய போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.