பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ராகுல் பஜாஜ் மறைந்தார்..!

இந்தியாவின் இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ராகுல் பஜாஜ், முதுமையின் காரணமாக இன்று தனது வீட்டில் மறைந்தார்.

இவரின் தலைமையில் தான் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேர்மன் பதவியில் இருந்து 2021 ஏப்ரல் மாதம் விலகிய ராகுல் பஜாஜ் இன்று மறைந்தார்.

டிவிஎஸ் அழைத்து வந்த வெளிநாட்டு அதிகாரி.. இனி பஜாஜ், ஹீரோவுக்குக் கஷ்டம் தான்..!

ராகுல் பஜாஜ்

ராகுல் பஜாஜ்

பஜாஜ் குழுமத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த ராகுல் பஜாஜ்-க்கு 83 வயதான நிலையில் அவருக்கு நிமோனியா மற்றும் இதயப் பிரச்சனையும் இருந்தது. கடந்த மாதம் ரூபி ஹால் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட ராகுல் பஜாஜ், உடல்நல குறைவால் சனிக்கிழமை (இன்று) பிற்பகல் 2.30 மணியளவில் மறைந்தார்.

 பஜாஜ் குழுமம்

பஜாஜ் குழுமம்

ராகுல் பஜாஜ் மறைவு குறித்துப் பஜாஜ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் பஜாஜ் அவர்களின் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தத்துடன் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் பிப்ரவரி 12, 2022 அன்று மதியம் காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராகுல் பஜாஜ்-ன் மனைவி ரூபா பஜாஜ் 2013ஆம் ஆண்டில் மறைந்தார்.

ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல்
 

ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல்

10 ஜூன் 1938 அன்று அகர்வால் குடும்பத்தில் பிறந்தார் ராகுல் பஜாஜ். இவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஜம்னாலால் பஜாஜ்-ன் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. பஜாஜ் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்றவர். கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி மற்றும் மும்பை அரசு சட்டக் கல்லூரியில் பயின்றார், பள்ளிக் கல்வியைக் கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி ஆகியவற்றில் பயின்றார்.

1965 முதல் தலைவர்

1965 முதல் தலைவர்

பஜாஜ் குரூப்-ன் நிர்வாகத்தை ராகுல் பஜாஜ் 1965ஆம் ஆண்டுக் கையில் எடுத்தார். இவரது தலைமையில் ஆட்டோமொபைல் துறையில் மட்டும் அல்லாமல் நிதி துறையிலும் வர்த்தகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 2006-10 வரையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜிய சபா உறுப்பினராக இருந்த ராகுல் பஜாஜ்-க்கு 2001 இல் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் பஜாஜ் மற்றும் சஞ்சீவ் பஜாஜ்

ராஜீவ் பஜாஜ் மற்றும் சஞ்சீவ் பஜாஜ்

2008 இல், அவர் பஜாஜ் ஆட்டோ குழுமத்தை 3 பிரிவுகளாகப் பிரித்தார் – பஜாஜ் ஆட்டோ, நிதியியல் சேவை நிறுவனமான பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ஒரு ஹோல்டிங் நிறுவனம் என 3 ஆக உடைத்தார். அவரது மகன்கள் ராஜீவ் பஜாஜ் மற்றும் சஞ்சீவ் பஜாஜ் இப்போது நிறுவனத்தின் வர்த்தகத்தை நிர்வாகம் செய்து வருகின்றனர்.

ராகுல் பஜாஜ் சொத்து மதிப்பு

ராகுல் பஜாஜ் சொத்து மதிப்பு

பிற தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்களை போலவே ராகுல் பஜாஜ் சொத்து மதிப்பும் பெருமளவு தனது நிறுவன பங்குகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதன் படி இன்றைய சந்தை மதிப்பீட்டின் படி ராகுல் பஜாஜ்-ன் மொத்த சொத்து மதிப்பு 8.09 பில்லியன் டாலர் உடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 305வது இடத்தில் இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rahul Bajaj: Former Chairman Of Bajaj Group Dies At 83 in his home

Rahul Bajaj: Former Chairman Of Bajaj Group Dies At 83 in his home பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ராகுல் பஜாஜ் மறைந்தார்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.