பரத் நடித்த நடுவன்: நாளை ஒளிபரப்பாகிறது

பரத் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான படம் நடுவன். இதில் அபர்னா வினோத், கோகுல் ஆனந்த், ஜார்ஜ் மரியான், யோக் ஜேப்பி உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஷரண் குமார் இயக்கிய இந்த படத்திற்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார், தரண்குமார் இசை அமைத்திருந்தார்.

ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற படம். நண்பனின் தேயிலை எஸ்டேட்டில் மேனேஜராக இருக்கும் பரத் எப்போதும் தன் வேலையிலேயே கவனமாக இருப்பார். எஸ்டேட் வளர்ச்சிக்கு கடுமையாக உழைப்பார். ஆனால் நண்பனுக்கும், பரத்தின் மனைவிக்கு தவறான உறவு இருக்கிறது என்பதை அறியும் அவர் அடுத்து என்ன ஆகிறார். என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

காதல், பயம், துரோகம் மற்றும் பழிவாங்கல் என பல்வேறு உணர்வுகளை வெளிக்காட்டும் கதைத்தளம் கொண்டதாக படம் அமைந்திருந்தது. இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முதன் முறையாக நாளை (பிப்ரவரி 13), இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.