பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சியில் பகீர் சம்பவம்: இரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பலர்


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட விருந்து விழாவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்த விருந்து நிகழ்வில் நால்வர் துப்பாக்கி குண்டு காயங்களுக்கு இலக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட தகவலில், பத்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர்கள் இதுவரை சிக்கவில்லை என்றே தெரிய வருகிறது.

இதனிடையே, துப்பாக்கி குண்டுகளுக்கு இலக்கான நால்வரும் சிகிச்சையில் இருப்பதாகவும், ஆபத்தான் நிலையில் இல்லை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யார் துப்பாக்கியால் சுட்டார்கள், யாரை குறி வைத்தார்கள் என்பது மட்டுமின்றி, துப்பாக்கிச் சூடில் ஈடுபட்டது ஒருவரா அல்லது ஒரு கும்பலா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஹாலிவுட் ஹொட்டலில் இருந்து ஜஸ்டின் பீபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வெளியேறிய அடுத்த சில நொடிகளில் துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய ஹொட்டலுக்கு வெளியே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளதும் கூச்சல் குழப்பமாக இருந்தது எனவும் பார்வையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இது கும்பல் வன்முறை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விருந்து நிகழ்ச்சியில் ஜஸ்டின் பீபர் மற்றும் அவரது மனைவியுடன், Drake, Leonardo DiCaprio, Tobey Maguire, Kendall Jenner மற்றும் Khloe Kardashian உட்பட பலர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.