மகளின் கோரிக்கை நிராகரிப்பு: யாரும் எதிர்பார்க்காததை செய்த ரஜினி..!

கடந்த தீபாவளிக்கு ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘
அண்ணாத்த
‘. சன் பிக்சர்ஸ் தயாரிந்திருந்த இந்தப்படத்தை சிறுத்தை
சிவா
இய்கியிருந்தார். ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் பலத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படங்களின் இயக்குனர்களின் பட்டியலில் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது.

‘அண்ணாத்த’ படம் வெளியான சமயத்தில் சௌந்தர்யா
ரஜினிகாந்த்
இயக்குனர் சிவாவை பெரிதும் பாராட்டியிருந்தார். மேலும் தலைவரின் வெறித்தனமான ரசிகை மற்றும் அவருடைய மகள் என்ற முறையில் மீண்டும் சிவா மற்றும் தனது அப்பா இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார் சௌந்தர்யா. இதனால் இரண்டாவது முறையாக சிவாவுடன் படமா? என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஜினியின் ‘
தலைவர் 169
‘ பட அப்டேட் மாஸாக வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனருடன் ரஜினி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா எடுத்துள்ள புதிய முடிவு: குடும்பத்தினர் நிம்மதி..!

‘தலைவர் 169’ பட இயக்குனர்கள் பட்டியலில் தேசிங்கு பெரியசாமி, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது. மேலும் சிவா இயக்கத்தில் நடிக்க சௌந்தர்யாவும் ரஜினியிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘தலைவர் 169’ இயக்குனராக நெல்சனை டிக் அடித்துள்ளார் ரஜினி.

சிறுத்தை சிவாவுடன் இணையாமல் நெல்சனுடன் ரஜினி இணைந்துள்ளது ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹுயூமரில் கலக்கும் ரஜினியும், டார்க் காமெடியில் பின்னியெடுக்கும் நெல்சனும் இணைவதால், ‘தலைவர் 169’ படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.