மகான் பார்த்துவிட்டு கார்த்தி சுப்பராஜை பாராட்டிய ரஜினி

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா நடித்துள்ள படம் மகான். இந்த படம் நான்கு காலகட்டங்களை கொண்ட கதைகளில் உருவாகியிருக்கிறது. இந்தப் படம் நேற்று முன்தினம் இரவு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இந்த படத்தை பார்த்துவிட்டு தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக தெரிவித்து இருக்கிறார் கார்த்தி சுப்பராஜ். அதில், எக்ஸலண்ட் மூவி, சூப்பர் பர்பாமன்ஸ், பிரில்லியன்ட் என்று ரஜினி சொன்னதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.