மக்களிடம் கொள்ளையடிப்பது காங்கிரஸ் கொள்கை: மோடி குற்றச்சாட்டு

அல்மோரா: மக்கள் எல்லோரையும் பிரித்து, கூட்டாக கொள்ளையடிப்போம் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.

உத்தராகண்ட் மாநில சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இம்மாநிலத்தின் அல்மோரா நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் எப் போதும் ஆதரிப்பார்கள். உ.பி.யில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு, பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பது தெளிவாகிறது. இந்த தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் எங்களை விட மக்கள் உறுதியாக உள்ளனர். நல்ல நோக்கங்கள் உடையவர்ளை வாக்காளர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.

முந்தைய காங்கிரஸ் அரசுகளால், உத்தராகண்ட் மாநிலத்தின் எல்லைக் கிராமங்கள், தாலுகாக்கள், மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன. எல்லைப் பகுதியின் வளர்ச்சிக்கு பாஜக அரசு திட்டம் வகுத்தது. இந்த எல்லைப் பகுதிகளுக்கு, துடிப்புமிகுந்த கிராமத் திட்டத்தை நாங்கள் உருவாக்கினோம்.

புதிய அடையாளம்

இந்தப் பத்தாண்டு உத்தராகண்டிற்கு உரியது. இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள். சமீபத்தில் இம்மாநிலத்தில், ரூ. 17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டன. உத்தராகண்ட் தற்போது வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. மாநிலம் புதிய அடையாளத்தைப் பெற்று வருகிறது. பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் வளர்ச்சிக்கான புதிய ஆற்றல் நிரம்பியுள்ளது.

அனைத்து பருவகால ‘சார்தாம் சாலை’ தனக்பூர்-பித்தோர்கர் பகுதிக்கு பயனளிக்கும்.அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவருக்குமான முயற்சி என்ற முழக்கத்துடன் எங்கள் அரசு செயல்படுகிறது. ஆனால் மக்கள் எல்லோரையும் பிரித்து, கூட்டாக கொள்ளையடிப்போம் என்பது காங்கிரஸின் கொள்கையாக உள்ளது.

மலைப்பாங்கான இடங்களில் ரோப்வே அமைக்கும் பர்வத்மாலா திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். நவீன சாலைகள் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்புகளை இம்மாநிலத் தில் நாங்கள் உருவாக்குவோம். குமாவன் – கார்வால் பகுதிகளுக்கு இடையே பிளவை உருவாக்க எதிர்க்கட்சி முயற்சித்தது.

ஆனால் இரட்டை இன்ஜின் கொண்ட பாஜக அரசு இரண்டு பகுதிகளுக்கும் வளர்ச்சிப் பணி களை இரட்டிப்பாக்க முயன்றது. ஏனென்றால் பாஜகவுக்கு உத்தரா கண்ட் ஒரு தேவபூமியாகும்.

உத்தராகண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சுற்றுலா துறை மேலும் வளர்ச்சி அடையும். சுற்றுலாவை மேம் படுத்துவோர் வேண்டுமா அல்லது புலம்பெயரும் நிலையை உரு வாக்குவோர் வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

– பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.