ரயிலுக்கு அடியில் மாட்டிக் கொண்ட பெண் – உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்

மத்திய பிரதேசத்தில் ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட பெண்ணை தனது உயிரை பணயம் வைத்து இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு ரயில் நிலையத்துக்கு இன்று காலை வந்த இருவர், அங்குள்ள தண்டவாளத்தில் நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரயிலுக்கு அடியில் புகுந்து மறுபுறம் செல்ல முயன்றனர். இதில் அந்த நபர் தண்டவாளத்தை கடந்து விட்ட நிலையில், அவரை பின்தொடர்ந்து சென்ற பெண் சிக்கிக்கொண்டார்.

भोपाल के बरखेड़ी फाटक में मालगाड़ी के सामने कूदी लड़की को बचाने के लिए महबूब नामक युवक पटरी पर कूद गया.

महबूब ने लड़की को पटरी के बीच पकड़े रखा, जब तक पूरी ट्रेन ऊपर से गुजर नहीं गई. pic.twitter.com/LDb2S4R5L4
— Alok Putul (@thealokputul) February 11, 2022

அந்த நேரத்தில் ரயிலும் நகரத் தொடங்கியது. அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர், தனது உயிரை துச்சமாக மதித்து அப்பெண்ணை மீட்டு ரயில் தண்டவாளத்தின் கீழே தன்னுடன் படுக்க வைத்தார். சரக்கு ரயிலின் 26 பெட்டிகள் கடந்துசென்ற பின்னர், இருவரும் எந்த காயமும் இன்றி வெளிவந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.