லைசென்ஸ் ராஜ் திட்டத்தை எதிர்த்த ராகுல் பஜாஜ்.. யாருக்கும் அஞ்சாத தொழிலதிபர்..!

இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் பல தனியார் நிறுவனங்கள் களமிறங்கிய நிலையில் மிகவும் சில நிறுவனங்களால் மட்டுமே இதுநாள் வரையில் பயணிக்க முடிந்தது. இந்த 75 வருட சுதந்திர இந்திய வரலாற்றில் லைசென்ஸ் ராஜ், தாராளமயமாக்கல் எனப் பல மாற்றங்கள் வந்த போதும் அசராமல் தொடர்ந்தும் ஆதிக்கம் செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று பஜாஜ் ஆட்டோ.

பஜாஜ் ஆட்டோ என்னும் பிரம்மாண்ட வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ராகுல் பஜாஜ் இன்று தனது 83 வயதில் உடல் நல குறைவால் மறைந்தார்.

இவர் இந்திய அரசின் லைசென்ஸ் ராஜ் திட்டத்திற்கு எதிராகப் போராடிய விதம இன்றும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.

ஹோண்டா, யமஹா, சுஸுகி-ஐ ஓடஓட விரட்டிய ராகுல் பஜாஜ்..!

 ராகுல் பஜாஜ்

ராகுல் பஜாஜ்

ராகுல் பஜாஜ் எப்பொழுதும் எளிமையாகப் பேசக்கூடியவர் என்றும், அவரது நண்பர்கள் அவரை ‘அச்சமற்றவர்’ என்று அழைக்கும் பெருமைக்கூறியவர். எப்போதும் அரசின் தவறுகளை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுவதில் ராகுல் பஜாஜ் தயக்கம் காட்டியது இல்லை, மோடி அரசு குறித்தும் பல முறை விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 லைசென்ஸ் ராஜ்

லைசென்ஸ் ராஜ்

லைசென்ஸ் ராஜ் என்பது 1947 முதல் 1990 வரையில் இந்தியாவில் தொழில் துவங்குவதற்கும், வர்த்தகம் செய்வதற்கும் உரிமங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அடைங்கிய அமைப்பு ஆகும். இது தனியார் நிறுவனங்கள் வர்த்தகத்தை நடத்துவதற்கும், துவங்குவதற்கும் பெரும் தடையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 80 அரசு அமைப்புகளிடம் ஒப்புதல்
 

80 அரசு அமைப்புகளிடம் ஒப்புதல்

இந்த லைசென்ஸ் ராஜ் திட்டம் நடைமுறையில் இருப்பதால் தனியார் நிறுவனங்கள் எதையாவது உற்பத்தி செய்வதற்கு முன்பு சுமார் 80 அரசு அமைப்புகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். அப்படி அனுமதி அளிக்கப்பட்டால் இந்திய அரசு உற்பத்தியை ஒழுங்குபடுத்தும்.

 மோனோபோலி நோட்டீஸ்

மோனோபோலி நோட்டீஸ்

ராகுல் பஜாஜ் 35 வயதாக இருக்கும் போதே பஜாஜ் ஆட்டோவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார். தொழில்துறை உரிமத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான ஸ்கூட்டர்களைத் தயாரித்த காரணத்தால் ராகுல் பஜாஜ்-க்கு மோனோபோலி மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

 25 சதவீதம் கூடுதல் உற்பத்தி

25 சதவீதம் கூடுதல் உற்பத்தி

அப்போதையைத் தொழில்துறை உரிம சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனம் உரிமம் பெற்ற திறனை விட 25 சதவீதம் வரை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று விதிகள் இருந்து. இதை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ராகுல் பஜாஜ், தன் வழக்கைத் தானே வாதாடினார்.

 எம் ஏ சிதம்பரம்

எம் ஏ சிதம்பரம்

ராகுல் பஜாஜ்-ன் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு எதிராக எம் ஏ சிதம்பரம் அவர்களின் நிறுவனம் சக போட்டி நிறுவனமாகக் கொண்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் சுயமாக வாதாடி வழக்கில் வெற்றிபெற்றதைத் தான் பெருமைப்படுவதாகச் சில வருடங்களுக்கு முன்பு ராகுல் பஜாஜ் ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.

 போராட்டம்

போராட்டம்

லைசென்ஸ் ராஜ் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் இந்தியாவிற்குக் கடினமானதாகவும், பேரழிவு தருவதாகவும் இருந்தது. நான் தொழிற்சாலையை விடவும் உத்யோக் பவனில் சான் அதிக நேரத்தை செலவழித்தேன், மேலும் தொழில்நுட்ப மேம்பாட்டு இயக்குநரகத்தில் உள்ள உயர் அதிகாரி ஹெச் சி ஷர்மா உட்படப் பலருடன் நட்பு கொண்டேன் என ராகுல் பஜாஜ் கூறினார்.

 இந்திரா காந்தி

இந்திரா காந்தி

இந்திரா காந்தி ஆட்சி காலகட்டத்தில் லைசென்ஸ் ராஜ் திட்டத்தின் கீழ் அரசு தனியார் நிறுவனங்களின் உற்பத்தியைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியது. இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, ஸ்கூட்டரை வாங்குபவர்கள் முன்பதிவு செய்து பல ஆண்டுகள் காத்திருந்து வாகனத்தை வாங்க வேண்டிய நிலை இருந்தது.

இதனால் காங்கிரஸ் கட்சியைத் தான் விரும்பினாலும் லைசென்ஸ் ராஜ திட்டத்திற்கு ராகுல் பஜாஜ் எதிர்ப்பு தெரிவித்து மட்டும் அல்லாமல் சிறைக்குச் செல்லவும் தயாராக இருந்ததாகக் கூறினார் ராகுல் பஜாஜ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rahul bajaj opposed License Raj system, Even he is ready to go Jail

Rahul bajaj opposed License Raj system, Even he is ready to go Jail லைசென்ஸ் ராஜ் திட்டத்தை எதிர்த்த ராகுல் பஜாஜ்.. யாருக்கும் அஞ்சாத தொழிலதிபர்..!

Story first published: Saturday, February 12, 2022, 22:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.