48 ஐ மணந்த 18.. அதுவும் மூன்றாவது தாரமாய்!

பாகிஸ்தானின் பிரபல கட்சி ஒன்றில் முக்கிய நிர்வாக பொறுப்பில் இருப்பவர் ஆமிர் லியாகத். 48 வயதான இவர், ஏற்கெனவே முதல் மனைவியை விவாரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்திருந்தார்.

இந்த நிலையில் ஆமிர் லியாகத்திடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக இரண்டாவது மனைவி அண்மையில் அறிவித்திருந்தார். இரண்டாவது மனைவியுடன் விவகாரத்து ஏற்பட்டுவிட்டதே என்ற ஆதங்கத்தில் இருந்த லியாகத். விவகாரத்து ஆன அதே நாளில் 18 வயது இளம்பெண் மணம் செய்து கொண்டுள்ளார்.

அதாவது தம்மைவிட 30 வயது குறைவான பெண்ணை மூன்றாவது தாரமாக மணம்புரிந்துள்ளதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பராக்கிரமமாக தெரிவித்துள்ளார்.

99 வயது மூதாட்டி மீது கைவைத்த வாலிபர்… பிரிட்டனி்ல் அதிர்ச்சி சம்பவம்

அத்துடன் ‘எனது நலம் விரும்பிகள், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்; நான் இருண்ட பாதையை கடந்து வந்துள்ளேன்’ என்று லியாகத் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

‘சிறு வயதில் இருந்தே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை பலமுறை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். நான் அழும்போதெல்லாம் எனது பெற்றோர் டிவியில் அவரது உருவப்படத்தை காண்பித்து என்னை சமாதானப்படுத்துவார்கள்’ என்று லியாகத்தை மணம் புரிந்துள்ள இளம்பெண் சியாடா டேனியா வெட்கம் கலந்த புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.