BB Ultimate எவிக்‌ஷன்: சுஜா வருணி, பாலா, அபிநய், ஜூலி – இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் சமீபத்தில் முடிவைடந்ததைத் தொடர்ந்து, ஒடிடியில் முதன் முறையாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில், ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் அல்டிமேட். பிக் பாஸ் முந்தைய சீசன்களில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய வனிதா விஜய்குமார், பாலா, தாடி பாலாஜி, ஜூலி உள்ளிட்ட 14 பேர் பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

BB Ultimate சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேஷன்

பிக் பாஸ் அல்டிமேட் 24 மணி நேர லைவ் எனச் சொல்லப்பட்டாலும், இதுவரைக்கும் முதல் நாள் நடக்கிற நிகழ்வுகளே மறுநாள் ஒளிபரப்பாகி வருவதாகத் தெரிகிறது. எவிக்‌ஷனைப் பொறுத்தவரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது எலிமினேட் ஆகிறவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியில் வந்து கொண்டிருந்தனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் கலந்து கொள்ளும் ஷூட்டிங் நடை பெறும். சில நேரங்களில் சனிக் கிழமையே சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களுக்குமான எபிசோடு ஷூட் செய்யப்பட்டு விடும்.

பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் வார எவிக்‌ஷன் கடந்த வாரம் சனிக்கிழமை நடந்தது. கமல் கலந்து கொண்ட இதன் ஷூட்டிங்கின் கடைசியில் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறினார். கமல் கலந்து கொண்ட இரண்டாவது வாரத்துக்கான எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று (12/2/22) காலை தொடங்கி தற்போது நடந்து வருகிறது. சுஜா வருணி, பாலாஜி, பாலா, தாமரை, ஜூலி, அபிநய் ஆகியோர் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்திருந்தனர். இவர்களில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி எலிமினேட் ஆகி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

சுஜா வருணி

சுஜா வெளியேறிய எபிசோடு இன்று இரவோ அல்லது நாளையோ ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப் படுகிறது. சுஜா பிக் பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நிகழ்ச்சிக்குள் வந்தார். தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் விருந்தினராகச் சில நாள்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் இவருக்குக் குழந்தை பிறந்த நிலையில் இப்போது பிக் பாஸ் அல்டிமேட்டுக்குள் வந்தார். இதனிடையே இரண்டாவது எவிக்ஷனாக அவர் வெளியேறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.