Quad 2022: வடகொரியா, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு குவாட் மாநாட்டில் மறைமுக எச்சரிக்கை!

மெல்பர்ன்: சுதந்திரமான மற்றும் சிறப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியது குவாட் தலைவர்களின் மாநாடு. இந்தச் சந்திப்பில் வட கொரியாவுக்கு நேரடியாகவும், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு மறைமுகமான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை (2022, பிப்ரவரி 11) மெல்போர்னில் நடைபெற்ற குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டின் 4வது பதிப்பில், ​​இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.  

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும், இந்தியாவில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை (UNSCR) மீறியதாகக் வட கொரியாவை கண்டித்த இந்த மாநாடு, பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளுக்காக அந்நாட்டை கண்டித்தனர்.

மேலும் படிக்க | அழுத்தம் கொடுக்கும் நாடுகள், அடம் பிடிக்கும் ரஷ்யா: மூளுமா உலகப்போர்?

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை, மற்ற நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாக்க வேண்டும்’ என, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும், ‘குவாட்’ அமைப்பின் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாரைஸ் பெய்ன் என குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், வட கொரியாவை பகிரங்கமாக கண்டித்த மாநாடு, சீனா மற்றும் பாகிஸ்தானையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருந்தனர். 

இந்த அறிக்கையில் பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், 26/11 மும்பை தாக்குதல் மற்றும் பதான்கோட் தாக்குதல்கள் உட்பட, இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் அமைப்புகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை பயன்படுத்தப்படாமல் இருப்பதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க | கனடாவில் நீடிக்கும் பதற்றம்; போராட்டத்தை ஒடுக்க கை கோர்க்கும் கனடா – அமெரிக்கா

இந்தோ-பசிபிக் பகுதியில் தனது ராணுவ பலத்தை அதிகப்படுத்தி வரும் சீனாவுக்கும் இந்த மாநாட்டில் மறைமுக செய்தி கொடுக்கப்பட்டது.

இந்த மாநாட்டில், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு, பயங்கரவாத பினாமிகளைப் பயன்படுத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம் மற்றும் பயங்கரவாதத்திற்கு பாதுகாப்பான புகலிடங்களாக இருக்கும் வசதிகளை ஒழிக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுமாறு வலியுறுத்துகிறோம் என்றும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்தியாவின் வடக்கு பதான்கோட் மாகாணத்தில், 2016-ம் ஆண்டு விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 7 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் படிக்க | Ukraine crisis: அமெரிக்காவிடம் THAAD எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்பைக் கோரும் உக்ரைன்

மும்பையில், இந்தியாவின் நிதித் தலைநகரில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் குழு நடத்திய தாக்குதலில் 166க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இரண்டு சம்பவங்களிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தீவிரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்தினர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியா இலக்கானது என்ற கவலையை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிரது. 

இவற்றைத் தவிர, ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக மாறுவதைத் தடுக்க வேண்டும் என்று இந்த மாநாட்டில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், குவாட் உறுப்பினர்கள் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர் .

அடுத்த குவாட் தலைவர்களின் உச்சி மாநாடு 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஜப்பானில் நடைபெறும் என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா – உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.